திருமணத்துக்கு அப்பாற்பட்ட பாலியல் உறவுக்கு தடை; மீறினால் சிறை: இந்தோனேஷிய நாடாளுமன்றத்தில் சட்டம் 

Published By: Digital Desk 2

04 Dec, 2022 | 11:23 AM
image

திருமணத்துக்கு அப்பாற்பட்ட பாலியல் உறவுக்கு தடை விதிக்கும் சட்டம் தற்போது இந்தோனேஷிய நாடாளுமன்றத்தில் மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்தோனேஷியாவில் திருமணத்துக்கு அப்பாலான பாலியல் உறவை தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கும் சட்டம் கடந்த 2019ஆம் ஆண்டு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. அப்போது அந்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அங்கு பாரியளவில் போராட்டங்கள் வெடித்தன. இதனால் அந்த சட்டம் அமுலுக்கு வருவது நிறுத்திவைக்கப்பட்டது.

இந்நிலையிலேயே, இந்தோனேஷிய நாடாளுமன்றத்தில் திருமணத்துக்கு அப்பாலான பாலியல் உறவுக்கு தடை விதிக்கும் சட்டம் மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது.  

இந்த சட்டம் எதிர்வரும் 15ஆம் திகதி நிறைவேற்றப்படும் என அந்த நாட்டின் நிதி அமைச்சர் எட்வர்ட் உமர் ஷெரீப் ஹியாரிஜ் தெரிவித்துள்ளார்.

இந்த சட்டம் திருமணத்துக்கு அப்பால் பாலியல் உறவு வைத்துக்கொள்வதும், திருமணத்துக்கு முன் இணைந்து வாழ்வதும் சட்ட விரோதமானது என்றும், இந்த சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்படுபவர்களுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் உமர் கூறியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமெரிக்காவில் மீள்குடியேறுவதற்கு தகுதிபெற்ற ஆப்கான் அகதிகளிற்கும்...

2025-01-21 16:08:47
news-image

துருக்கியில் ஹோட்டலில் தீ : 66...

2025-01-22 02:51:26
news-image

பணயக்கைதிகளிற்கு நினைவுப்பரிசுகளை வழங்கிய ஹமாஸ்

2025-01-21 11:37:02
news-image

காசாவில் இடிபாடுகளிற்குள் சிக்குண்டுள்ள பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட...

2025-01-21 11:04:38
news-image

தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு:...

2025-01-21 10:05:55
news-image

உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து வெளியேறுகின்றது அமெரிக்கா-...

2025-01-21 08:30:11
news-image

அமெரிக்க மெக்சிக்கோ எல்லையில் அவசரகாலநிலை-குடியேற்றவாசிகள் நாடு...

2025-01-20 23:09:44
news-image

எனது உயிர் ஒரு நோக்கத்திற்காகவே காப்பாற்றப்பட்டது-...

2025-01-20 23:01:43
news-image

அமெரிக்காவின் பொற்காலம் உதயம் - ஜனாதிபதியாக...

2025-01-20 22:54:22
news-image

அமெரிக்காவின் 47 வது ஜனாதிபதியாக பதவியேற்றார்...

2025-01-20 22:45:39
news-image

பதவியேற்பதற்காக ரொட்டுன்டா வந்தார் டிரம்ப்

2025-01-20 22:26:20
news-image

டிரம்பின் பதவியேற்பு நிகழ்வில் அமெரிக்க முன்னாள்...

2025-01-20 22:19:13