சாம்பார் பொடி

By Ponmalar

03 Dec, 2022 | 05:19 PM
image

தேவையான பொருள்கள் 

தனியா - கால் கிலோ 

செத்தல் மிளகாய் - 125 கிராம் 

துவரம்பருப்பு - 100 கிராம் 

கடலைப்பருப்பு - 50 கிராம் 

மிளகு - 25 கிராம் 

வெந்தயம் - 10 கிராம் 

மஞ்சள் - 25 கிராம் 

செய்முறை 

மேற்கண்ட பொருள்கள் அனைத்தையும் தனித்தனியாக வெயிலில் போட்டு உலர்த்த வேண்டும். 

பின்னர் தனித்தனியே எண்ணெய் எதுவும் இல்லாமல் வறுத்து எடுத்துக் கொள்ளவும். 

சூடாக இருக்கும் பொழுது பொடி திரிக்கக் கூடாது. 

வறுத்த அல்லது நன்கு காய வைத்த மசாலாப் பொருள்கள் சூடு ஆறியவுடன் மில்லில் கொடுத்து நைசாக அரைத் வாங்கிக் கொள்ளுங்கள். 

அரைத்த பொடியை அப்படியே சூடாக அடைத்து வைக்கக்கூடாது. 

அது விரைவில் கெட்டி தட்டியோ கெட்டுப் போகவோ வாய்ப்புண்டு. 

அதனால் சிறிது ஆறவிட்டு, டைட்டான கண்டெய்னரில் போட்டு சேமித்து வையுங்கள். தினசரி பயன்பாட்டுக்கு சிறிய டப்பாவில் வைத்துக் கொள்ளுங்கள். அவ்வளவு தான் அய்யங்கார் வீட்டு சாம்பார் பொடி.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right