நடிகர் ரஜினி காந்த் தனது குடும்பத்துடன் நேரில் வந்து ஜெயலலிதா உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். 

இதன்போது,  அருகில் இருந்த முதலமைச்சர் பன்னீர் செல்வம், சசிகலாவிற்கு ஆறுதல் கூறினார். ரஜினி காந்துடன் அவரது மனைவி, மகள்கள் மற்றும் மருமகன் தனுஷ் ஆகியோர் வந்திருந்தனர்.

அப்பல்லோ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானார். இவரது உடல் ராஜாஜி அரங்கத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.