ஆண்களுக்கும் ஜீன்ஸ் நல்லதல்ல

Published By: Nanthini

03 Dec, 2022 | 02:03 PM
image

வெப்பமான தட்பவெப்ப நிலையில் நம் உடலில் இருந்து அதிகளவில் வியர்வை வெளியாகும். நாம் உடுத்தும் உடை வியர்வையை உறிஞ்சக்கூடிய தன்மை உடையதாக இருக்க வேண்டும் என்பதால் நம் நாட்டுக்கு ஏற்ற உடை என்றால் அது பருத்திதான். 

பருத்தி உடைகள் அணிந்தாலும், சாயம் போகாதபடியான தரமான உடைகளை அணிய வேண்டும். ஏனெனில், வெளியேறும் சாயத்தால் textile dermatitis எனும் சரும நோய் ஏற்படும். 

ஜீன்ஸ் போன்ற இறுக்கமான உடைகளை அணியும்போது சுரக்கிற வியர்வை வெளியேறாமல், அதிலிருந்து பக்டீரியாக்கள் உற்பத்தியாகி, படர்தாமரை போன்ற சரும நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

நிக்கல் அலர்ஜி உள்ளவர்கள் ஜீன்ஸ் அணியும்போது அதன் பட்டனில் இருக்கும் நிக்கல் உலோகம் பாதிப்பை ஏற்படுத்தும். ஆண்கள் இறுக்கமான உள்ளாடைகளை அணியும் நிலையில் தட்பவெப்பநிலை அதிகரித்து விந்து உற்பத்தி குறைவதற்கும் வாய்ப்பிருக்கிறது. 

உள்ளாடைகளில் உள்ள எலாஸ்டிக் இறுக்கமாக தோலோடு ஒட்டியிருப்பதால் தேமல் போன்றவை ஏற்படும். தளர்வான கொட்டன் உள்ளாடைகளை அணிவதே நல்லது. 

நம் உடலிலேயே மிகப்பெரிய உறுப்பு தோல்தான். அதனை பராமரிக்க தினம் இரு வேளை குளிப்பதை வாடிக்கையாக்கிக்கொள்ளலாம். 

மனிதர்களின் தோலில் இயற்கையாகவே 5.5 ஜீபி அமிலம் மற்றும் காரத்தன்மை விகிதம் அளவிலான அமிலத்தன்மை இருக்கிறது.

இந்த அமிலத்தன்மை கிருமித்தொற்றுகளை தடுக்கும். இன்று நாம் பெரும்பாலும் பயன்படுத்தும் சவர்க்காரங்களில் 7 ஜீபி அளவுக்கு மேல் அமிலத்தன்மை இருக்கின்றன. அவையெல்லாம் தோலுக்கு உகந்தவையல்ல.

சவர்க்காரம் வாங்கும்போது 7 ஜீபி அளவுக்கும் குறைவான சோப்பாக பார்த்து வாங்க வேண்டும். 

தோலில் நல்ல பக்டீரியாக்கள் இருக்கும் வரையில்தான் கெட்ட பக்டீரியாக்களின் தாக்குதல் இருக்காது. அன்டிபயோட்டிக் சோப் உபயோகிக்கும்போது அவை தோலில் இருக்கும் நல்ல பக்டீரியாக்களையும் சேர்த்து அழித்துவிடுவதால் கெட்ட பக்டீரியாக்களின் தாக்குதல் ஏற்படும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹண்டிங்டன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-03-26 16:32:47
news-image

இடியோபதிக் பல்மனோரி ஃபைப்ரோசிஸ் எனும் நுரையீரல்...

2024-03-24 21:02:07
news-image

அர்த்ரால்ஜியா எனும் மூட்டு வலி பாதிப்பிற்குரிய...

2024-03-20 21:20:55
news-image

செபோர்ஹெக் கெரடோசிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2024-03-20 09:17:28
news-image

குரல்வளை வீக்கம் : நவீன சிகிச்சை

2024-03-18 18:23:28
news-image

ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் ரெட்டினோபதி எனும் விழித்திரை பாதிப்பிற்குரிய...

2024-03-16 14:38:19
news-image

உள்காது பாதிப்புகளை கண்டறிவதற்கான நவீன பரிசோதனைகள்

2024-03-15 18:16:00
news-image

பெருங்குடல் வீக்கமும் நவீன சிகிச்சையும் 

2024-03-14 16:20:48
news-image

சிறுநீரக ஆரோக்கியம், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!...

2024-03-14 15:59:51
news-image

ஆசனவாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சத்திர...

2024-03-13 22:50:05
news-image

மயோகார்டிடிஸ் எனும் இதய தசையில் ஏற்படும்...

2024-03-08 17:40:06
news-image

நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்...

2024-03-07 13:48:04