இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான  நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக மீன்பிடி மற்றும் கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த பிரச்சினை தொடர்பிலான இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உயர் மட்ட பேச்சுவார்த்தையொன்று ஜனவரியில் இடம்பெறவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் குழுநிலை விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினைகள் தொடர்பில் தீர்க்கமான முடிவொன்றினை நாம் எட்டவேண்டும். அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கைப்பற்றப்பட்ட படகுகள் மற்றும் உபகரணங்கள் விடுவிக்கப்படவில்லை. தொடர்ந்தும் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.