கடந்த சீசன் வரை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்த எல் பாலாஜி ஓய்வடைந்ததையடுத்து சூப்பர் கிங்ஸ் அகாடமியில் டுவைன் பிராவோ நியமிக்கப்பட்டுள்ளார்.
டுவைன் பிராவோ 183 ஸ்டிரைக்களுடன் ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி ஆல்ரவுண்டராகவும் சென்னை அணிக்கு பல்வேறு ஆட்டங்களில் வெற்றி தேடி தந்து 1,560 ரன்களை குவித்துள்ளார்.
டுவைன் பிராவோ ஒரு வீரராக ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெற்றார். மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த சீசன் வரை சூப்பர் கிங்ஸின் பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்த எல் பாலாஜி, ஒரு வருடம் ஓய்வு எடுத்தார். ஆனால் சூப்பர் கிங்ஸ் அகாடமியில் ஈடுபடுவார்.
இந்நிலையில் பத்து வருடங்களுக்கு மேல் சென்னை அணியில் விளையாடி வந்த 39 வயதான பிராவோவை இந்தாண்டு சென்னை அணி நிர்வாகம் அவரை அணியில் இருந்து விடுவித்தது.
இந்நிலையில் வரும் 23ஆம் திகதி ஐபிஎல் மினி ஏலத்தில் பங்கேற்கும் வீரர்கள் பட்டியலை பிசிசிஐ வெள்ளிக்கிழமை (02) அறிவித்தது. இதில் பிராவோவின் பெயர் இடம் பெறவில்லை. இதனால் ரசிகர்கள் ஐபிஎல் தொடரில் இருந்து அவர் ஓய்வு பெறவுள்ளதாக நினைத்த நிலையில் அவர் சென்னை அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து சென்னை சூப்பர் சிங்ஸ் அணி வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை அணியில் வீரராக விளையாடி வந்த பிராவோ அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் இருந்து பந்துவீச்சு பயிற்சியாளராக பணியாற்றுவார் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தெரிவித்துள்ளது.
மேலும், 2013 மற்றும் 2015 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டை வீழ்த்தி முதல் இடத்தில் இருந்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM