(எம்.மனோசித்ரா)
அரச நிறுவனங்களின் இழப்புக்களை மக்கள் மீது சுமத்துவது பொருத்தமற்றது. கடந்த 4 மாதங்களில் ஒரு பில்லியன் இலாபமீட்டியுள்ள இலங்கை மின்சார சபை இந்த சந்தர்ப்பத்தில் மின் கட்டணத்தை அதிகரிப்பது பொருத்தமற்றது.
எனவே, இந்த தீர்மானத்தை கைவிடுமாறு கோரிக்கை விடுப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று (டிச. 2) வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனை தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2023ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்துக்கு பொதுஜன பெரமுன அதன் முழுமையான ஆதரவை வழங்கும். அதேபோன்று பெரும்பான்மை வாக்குகளை பெற்று, அதனை நிறைவேற்றுவதற்காக ஏனைய தரப்பினருடனும் கலந்துரையாடப்படும்.
தற்போது மீண்டும் மின்சார கட்டணத்தை அதிகரிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாம் ஆளுந்தரப்பினராக உள்ள போதிலும், மக்கள் சார்பாகவே செயற்படுவோம்.
கடந்த முறை மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டமை மக்களுக்கு பெரும் சுமையாக உள்ளது. அவ்வாறிருக்கையில், மீண்டும் கட்டணம் அதிகரிக்கப்பட்டால் அதனை மக்களால் தாங்கிக்கொள்ள முடியாது.
கடந்த ஒகஸ்ட் மாதம் மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டதன் பின்னர் இதுவரையில் இலங்கை மின்சார சபை ஒரு பில்லியன் இலாபம் ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனவே, இந்த சந்தர்ப்பத்தில் மின் கட்டணத்தை அதிகரிப்பது பொருத்தமானதாக இருக்காது. அரசாங்கம் அதன் வருமானத்தை அதிகரித்துக்கொள்ள வேண்டுமெனில், அதனை வேறு வழிகளில் பெற்றுக்கொள்ள வேண்டும்.
அரச நிறுவனங்களின் இழப்புக்களை மக்கள் மீது சுமத்துவது பொருத்தமற்றது. சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதன் மூலம் வருமானத்தை அதிகரித்துக்கொள்ளலாம்.
எனவே, பதாதைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கூச்சலிட்டுக்கொண்டிருப்பவர்களிடம், சுற்றுலாத்துறையை பாதிக்கும் வகையில் செயற்பட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM