உள்ளூராட்சி மன்ற தேர்தலை பிற்போட்டு தேர்தல் ஆணைக்குழுவை சுற்றிவளைக்க வைக்க வேண்டாம் - நளின் பண்டார

Published By: Nanthini

03 Dec, 2022 | 10:48 AM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

க்கள் தேர்தல் ஆணைக்குழுவை சுற்றிவளைக்க வைக்காமல் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆணைக்குழுவுக்கு இருக்கும் அதிகாரத்துக்கு அமைய செயல்பட வேண்டும். என்றாலும், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் இரட்டை வேடம் போடுகிறோம் என்ற சந்தேகம் எழுகின்றது என எதிர்க்கட்சி உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (டிச. 2) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் சுற்றாடல் அமைச்சு, வனஜீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சு விடயதானங்களுக்கான  நிதி ஒதுக்கீடுகள் குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரசாங்கம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு தயாராக வேண்டும். ஆனால், தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் இரட்டை வேடம் போடுகிறார்களோ என்ற சந்தேகம் எமக்கு எழுகின்றது. 

தேர்தல் ஆணைக்குழுவுக்கு தேர்தலை நடத்தும் அதிகாரம் இருக்கிறது. இளம் வேட்பாளர்களை புதிய வேட்பாளர் பட்டியலில் சேர்க்க வேண்டியிருப்பதால் தேர்தலை அறிவிக்க முடியாமல் இருப்பதாக ஆரம்பத்தில் தெரிவித்தார்கள். 

தற்போது அந்த நடவடிக்கை முடிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் தொடர்ந்தும் தாமதிக்காமல் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அத்துடன் மக்களுக்கு தேர்தல் தாகம் இருக்கிறது. ஏனெனில், மக்கள் தொழில் இல்லாமையால் இன்று ஜீவனோபாயத்தை தேடிக்கொள்ள முடியாமல் இருக்கின்றனர். மக்கள் விரக்தியில் இருக்கின்றனர். தங்களின் கோபத்தை வெளிப்படுத்த இடமில்லாமல் இருக்கின்றனர். வீதிக்கிறங்கி போராடினால் கைதுசெய்யப்படுகின்றனர். அந்தளவுக்கு அரசாங்கத்தால் மக்கள் பாரிய அச்சத்தில் இருக்கின்றனர். 

அதனால் மக்கள் அரசாங்கத்துக்கு எதிராக தங்களின் கோபத்தை வெளிப்படுத்த உள்ளூராட்சி மன்ற தேர்தலை மக்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். அதனால் எங்களை தேர்தல் ஆணைக்குழுவை சுற்றிவளைக்கவோ, அங்கு வந்து கூடாரம் அமைக்கவோ வைக்கவேண்டாம் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரை கேட்டுக்கொள்கின்றேன். 

தேர்தல் ஆணைக்குழுவுக்கு இருக்கும் அதிகாரத்துக்கமைய செயற்படுங்கள். செயற்படுத்த அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. அவ்வாறு இல்லாமல் ஜனாதிபதியின் அல்லது பதில் ஜனாதிபதி பசில் ராஜபக்ஷவின் கட்டளைகளுக்கு அமைய செய்தியாளர் சந்திப்புக்களை நடத்தி, காலம் கடத்த வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

போரா சமூக ஆன்மீகத் தலைவர் ஜனாதிபதியை...

2024-03-04 01:35:24
news-image

வெற்றிலைக்கேணியில் மீனவர்கள் இடையே முறுகல் ;...

2024-03-04 01:25:16
news-image

சாந்தனின் புகழுடலுக்கு அவரது சகோதரி ஆரத்தி...

2024-03-03 22:19:24
news-image

பொருட்களின் விலையை குறைக்க பணம் இல்லாத...

2024-03-03 22:02:43
news-image

விவசாயத்தை நவீனமயமாக்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை

2024-03-03 20:54:33
news-image

வெலிகமவில் தனியார் அரபு பெண்கள் பாடசாலையில்...

2024-03-03 19:41:54
news-image

தாவடி சந்தியில் விபத்து - ஒருவர்...

2024-03-03 19:14:27
news-image

ஐஸ் போதைப்பொருளை சொக்லேட்டில் மறைத்து கடத்தல்: ...

2024-03-03 18:46:13
news-image

நாட்டில் நாளைய வெப்பமான காலநிலை தொடர்பில்...

2024-03-03 17:37:58
news-image

யாழ். வடமராட்சியை சென்றடைந்தது சாந்தனின் புகழுடல்...

2024-03-03 17:52:54
news-image

இந்தியாவின் மாநிலமாக இலங்கையை மாற்றியமைக்கும் முயற்சிகளுக்கு...

2024-03-03 17:23:31
news-image

கசினோவில் தோற்றதால் போதைப்பொருள் கடத்தல் குழுவுடன்...

2024-03-03 17:27:00