மணமேடையில் மணமகன் கொடுத்த முத்தம்... திருமணத்தையே நிறுத்திய மணமகள் - இந்தியாவில் சம்பவம்

By Digital Desk 2

03 Dec, 2022 | 10:07 AM
image

அனைவரது முன்னிலையிலும் மணமேடையில் மணமகன் மணமகளுக்கு முத்தமிட்டதால் திருமணம் நின்ற சம்பவம் ஒன்று இந்திய உத்தரபிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் சம்பால் பகுதியில் கடந்த 27ஆம் திகதி இரவு விவேக் அக்னிகோத்ரி என்ற இளைஞருக்கும், அப்பகுதியை சேர்ந்த 23 வயதான பட்டதாரி இளம்பெண் ஒருவருக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போழுது வரவேற்பு நிகழ்ச்சியில் மணமக்கள் மாலைகளை மாற்றிக்கொண்டபோது, திடீரென மணமகன் விவேக் அக்னிகோத்ரி, மணமகளை முத்தமிட்டார். இதனால் மணமகள் விருந்தினர்கள் அனைவரது முன்னிலையிலும் அவர் முத்தமிட்டது தனக்கு அவமானமாக கருதி திருமண விழாவை நிறுத்தியுள்ளார். இதனால் அனைவரும் மணப்பண்ணின் குடும்பத்தினரை சமதானப்படுத்த முயன்றும் பெண்ணின் முடிவை மாற்ற முடியவில்லை.

அனைவரின் முன்னிலையில் அநாகரிகமாக நடந்து கொள்ளும் ஒருவரை திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லை என்று பொலிஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். பொலிஸார் மணப்பெண்ணை சமதானப்படுத்திய போதும் அது நடக்கவில்லை.

மேலும் அந்த பெண் பொலிஸ்நிலையத்தில் அளித்த புகாரில் மண மேடையில் இருந்த போது மணமகன் என்னை தகாதமுறையில் தொட்டதாகவும், அவர் எதிர்பாராமல் செய்த செயலால் அதிர்ச்சி அடைந்தேன் மற்றும் அவமானப்படுத்தப்பட்டேன் என புகார் அளித்துள்ளார்.

இந்த நிலையில் தன் மீதான குற்றச்சாட்டை மணமகன் விவேக் அக்னிகோத்ரி மறுத்துள்ளார். மணமகளுடன் பந்தயம் கட்டியதன் அடிப்படையிலேயே அவருக்கு மணமேடையில் வைத்து முத்தம் கொடுத்ததாக அவர் கூறியுள்ளார். அனைவரும் முன்னிலையிலும் முத்தமிட்டால் ரூ.1,500 தருவதாகவும், இதை செய்ய முடியாவிட்டால் ரூ.3000 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்றும் பந்தயம் கட்டியிருந்ததாக அவர் கூறியுள்ளார். மணமகனின் இந்த புகாருக்கு மணமகள் மறுத்துள்ளார். மணமேடையில் மணமகளுக்கு முத்தமிட்டதால் திருமணம் நின்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரீட்சை மண்டபத்தில் 500 மாணவிகளுக்கு மத்தியில்...

2023-02-02 15:39:46
news-image

நிச்சயதார்த்தத்தின்பின் திருமணம் செய்ய மறுத்த பெண்...

2023-02-02 13:52:05
news-image

அதிவேக ரயிலில் குழந்தை பிரசவித்த பயணி:...

2023-01-30 17:18:40
news-image

370 கிலோ காரை தனது உடலால்...

2023-01-30 09:44:33
news-image

15 வயது சிறுமியாக நடித்து, பாடசாலை...

2023-01-27 10:04:10
news-image

அபுதாபி அரச குடும்ப ஊழியராக காட்டிக்கொண்ட...

2023-01-17 16:24:01
news-image

ஒரு நபரால் உருவாகிய 71 குழந்தைகள்

2023-01-13 15:35:42
news-image

புது வருடம் - பயோடேட்டா

2023-01-09 14:01:43
news-image

வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டை குழந்தைகள்...

2023-01-07 14:50:22
news-image

சீன ஆற்றில் ஐஸ் பூக்கள்

2023-01-02 14:14:14
news-image

ஆபத்தான வகையில் மோட்டார் சைக்களில் பயணித்த...

2022-12-30 13:07:47
news-image

102 பிள்ளைகளுக்கு தந்தையான பின் குடும்பக்கட்டுப்பாட்டுக்கு...

2022-12-27 13:17:42