பரபரப்பான போட்டியில் சேர்பியாவை வெற்றி கொண்டு 2ஆம் சுற்றில் நுழைந்தது சுவிட்சர்லாந்து

Published By: Digital Desk 5

03 Dec, 2022 | 09:17 AM
image

(நெவில் அன்தனி)

சேர்பியாவுக்கு எதிராக ஸ்டேடியம் 974 விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (02) நடைபெற்ற மிகவும் பரபரப்பான போட்டியில் 3 - 2 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றி கொண்ட சுவிட்சர்லாந்து 2ஆம் சுற்றில் விளையாட தகுதிபெற்றது.

இந்தப் போட்டியை வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்டால் 2ஆம் சுற்றுக்கு தெரிவாகி விடலாம் என்பதை அறிந்திருந்த சுவிட்சர்லாந்து போட்டியின் 20ஆவது நிமிடத்தில் ஸேர்தான் சக்ரி மூலம் கோல் போட்டு முன்னிலை அடைந்தது.

ஆனால் அடுத்த 6ஆவது நிமிடத்தில் சேர்பியா சார்பாக அலெக்சாண்டர் மிட்ஸோவிக் கோல் நிலையை சமப்படுத்தினார்.

மேலும் 9 நிமிடங்கள் கழித்து டுசான் வியாஹோவிக் போட்ட கோல் சேர்பியாவை முன்னலையில் இட்டது.

எனினும் இடைவேளை நெருங்கிக்கொண்டிருந்த போது 44ஆவது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து சார்பாக ப்ரீல் எம்போலா கோல் நிலையை சமப்படுத்தினார்.

இடைவேளை முடிந்து ஆட்டம் மீண்டும் தொடர்ந்த 3ஆவது நிமிடத்தில் ரிமோ ஃப்றூலர் போட்ட கோல் சுவிட்சர்லாந்தை மீண்டும் முன்னிலை (3 - 2) அடையச் செய்தது.

அதனைத் தொடர்ந்து இரண்டு அணிகளுக்கும் கோல் போடுவதற்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் கிடைத்த போதிலும் அவை கைகூடாமல்போக  சுவிட்சர்லாந்து பரபரப்பான வெற்றியை ஈட்டியது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பலஸ்தீன ஆதரவு கருத்துக்களை வெளியிட்டமைக்காக மைன்ஸ்...

2024-07-15 16:34:03
news-image

ஒரு மில்லியன் டென்னிஸ் ரசிகர்களை உருவாக்க...

2024-07-15 16:00:37
news-image

ஒலிம்பிக்கில் 2 தங்கப் பதக்கங்களை வென்ற...

2024-07-15 15:58:57
news-image

யூரோ கிண்ணத்தை நான்காவது தடவையாக ஸ்பெய்ன்...

2024-07-15 12:57:03
news-image

விம்பிள்டன் சம்பியனாகியதை நம்ப முடியவில்லை -...

2024-07-15 12:58:23
news-image

ஜெவ்னா கிங்ஸை 9 விக்கெட்களால் இலகுவாக...

2024-07-14 23:19:25
news-image

தம்புள்ள சிக்சர்ஸை சுப்பர் ஓவரில் வெற்றிகொண்டது...

2024-07-14 22:31:40
news-image

கலம்போ புட்போல் லீக் இறுதிப் போட்டி...

2024-07-14 15:03:47
news-image

இறுதிச் சுற்றில் ஜெவ்னா கிங்ஸ், கோல்...

2024-07-14 14:32:32
news-image

இலங்கை ரி20 அணியின் புதிய தலைவர்...

2024-07-14 14:02:37
news-image

3000 மீற்றரில் முல்லைத்தீவு விதுஷன், 5000...

2024-07-14 13:27:15
news-image

18 வயதின் கீழ் தெற்காசிய கூடைப்பந்தாட்டம்...

2024-07-14 09:59:27