குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சென்னை வந்த விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால், அவர் மீண்டும் டெல்லி திரும்பினார்.

உடல்நலக் குறைவு காரணமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று இரவு உயிரிழந்தார். அவரது உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக சென்னை ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ளது.

அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சென்னை வருகை தர இருந்தார்.

இதற்காக டெல்லியில் இருந்து இந்திய விமானப் படைக்கு சொந்தமான விமானத்தில் அவர் புறப்பட்டார். ஆனால், புறப்பட்ட சில நிமிடங்களில் நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது திடீரென கோளாறு ஏற்பட்டது.

இதையடுத்து, அந்த விமானம் உடனடியாக டெல்லிக்கு திருப்பப்பட்டுள்ளது.