கடுமையான கொவிட்கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கைவிடுகின்றதா சீனா?

Published By: Rajeeban

02 Dec, 2022 | 04:06 PM
image

சீனா தனது கடுமையான கொவிட் கட்டுப்பாடுகளை தளர்த்தலாம் என்பதற்கான சமிக்ஞைகள் வெளியாகியுள்ளன.

பூஜ்ஜிய கொவிட் கொள்கை காரணமாக நாளாந்த வாழ்க்கை வர்த்தக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்ற நிலையிலேயே சீனா தனது கடும் கட்டுப்பாடுகளை தளர்த்தக்கூடும் என்பதற்கான சமிக்ஞைகள் வெளியாகியுள்ளன.

கொவிட் கட்டுப்பாடு தொடர்பில் தனது நாடு புதிய நிலையையும் பணியையும் எதிர்கொண்டுள்ளது என சீனாவின் கொவிட் நடவடிக்கைகளிற்கு பொறுப்பான தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஒமிக்ரோனின் குறைந்துவரும் நச்சுத்தன்மை தடுப்பூசிசெலுத்துவது அதிகரிப்பது மற்றும் கொரோனா பெருந்தொற்று குறித்த பெருமளவு அனுபவம் போன்றவற்றினால் தொற்றுநோய் கட்டுப்பாடு புதிய கட்டத்தையும் பணியையும் எதிர்கொள்கின்றது என துணை பிரதமர் சன் சுன்லன் தெரிவித்துள்ளார்.

பூஜ்ஜிய கொவிட்கொள்கை காரணமாக ஏற்பட்ட இழப்புகள் பாதிப்புகள் தீவிரமடைந்ததை தொடர்ந்து சீனாவின் 19க்கும் மேற்பட்ட நகரங்களில் முன்னர் ஒருபோதும் இல்லாத ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ள நிலையிலேயே இவ்வாறான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சீன கம்யுனிஸ்ட் கட்சியின் கொவிட் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படு;த்துவதில்  முக்கியமானவராக காணப்படும் சன்சுன்லன் பூஜ்ஜிய கொள்கை குறித்து எதனையும் தெரிவிக்கவில்லை என ஜிங்குவா தெரிவித்துள்ளது.

இதேவேளை சீனாவின் உயர் சுகாதார குழுவை சேர்ந்த அதிகாரிகள் சிலர் கொவிட் கட்டுப்பாடு தொடர்பான சில அணுகுமுறைகளில் மாற்றங்களை மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளனர்.

உள்ளுராட்சி நிறுவனங்கள் பொதுமக்களின் வேண்டுகோள்களிற்கு உடனடியாக தீர்வை காணவேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாப்பரசரின் உடல்நிலை குறித்து வத்திக்கானின் அறிவிப்பு

2025-02-15 13:04:33
news-image

படகுடன் மகனை விழுங்கிய திமிங்கிலம் -...

2025-02-14 17:35:40
news-image

உடல்நலப்பாதிப்பு - பாப்பரசர் மருத்துவமனையில் அனுமதி

2025-02-14 16:24:16
news-image

புட்டினுடன் டிரம்ப் தொலைபேசி உரையாடல் -...

2025-02-14 15:11:08
news-image

செர்னோபில் அணுஉலையை ரஸ்ய ஆளில்லா விமானம்...

2025-02-14 14:31:15
news-image

புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட பின்னரும் ஜேர்மனி நாடு...

2025-02-14 13:13:29
news-image

உக்ரைன் யுத்தம் குறித்து இன்று முக்கிய...

2025-02-14 12:22:29
news-image

ட்ரம்பை சந்தித்த இந்திய பிரதமர் .....

2025-02-14 11:07:20
news-image

ஜேர்மனியில் பொதுமக்கள் மீது காரால் மோதிய...

2025-02-14 07:41:47
news-image

தாய்வானில் வணிக வளாகத்தில் வெடிப்பு சம்பவம்...

2025-02-13 15:32:35
news-image

ஆப்கான் தலைநகரில் ஒரே வாரத்தில் இரண்டாவது...

2025-02-13 14:24:17
news-image

உக்ரைன் குறித்த அமெரிக்காவின் கொள்கைகளில் மாற்றம்?

2025-02-13 12:40:09