மோர் ஃப்ரைட் சிக்கன்

By Ponmalar

02 Dec, 2022 | 04:19 PM
image

தேவையான பொருட்கள் 

சிக்கன் - 1 கிலோ

எண்ணெய் - தேவையான அளவு

மைதா - 2 கப்

உப்பு - தேவையான அளவு

மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்

ஊற வைப்பதற்கு...

மோர் - 2 கப்

இஞ்சி, வெ.பூண்டு விழுது - 2 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

மிளகு - சிறிது

மசாலா தூள் - 1 டீஸ்பூன்

செய்முறை 

ஒரு பாத்திரத்தில் சிக்கனை எடுத்து அதில் மிளகு, உப்பு, மசாலா, நசுக்கிய இஞ்சி மற்றும் வெ.பூண்டு சேர்த்து நன்றாக கலக்கவும்.

பின் அதில் மோர் ஊற்றி சிறிது நேரம் ஊறவிடவும். 

இப்போது ஒரு தட்டில் மைதா மா, உப்பு மற்றும் மிளகாய் தூள் எடுத்து நன்றாக கலக்கவும். 

அந்த கலவையில் சிக்கன் துண்டுகளை போட்டு அனைத்து பக்கங்களிலும் படுமாறு நன்கு பிரட்டி எடுக்கவும். 

மா நன்கு சிக்கனில் ஒட்டும் வரை உலரவிடவும். 

பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, சூடானதும் சிக்கன் துண்டுகளை போட்டு பொன்னிறமாக வறுக்கவும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right