களுத்துறை தெற்கு, பேருவளை மற்றும் அளுத்கம  போன்ற பகுதிகளில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 4 சந்தேக நபர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய, மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் கைதுசெய்யப்படும்போது கொள்ளைச் சம்பவங்களுக்கு பயன்படுத்திய முச்சக்கர வண்டியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் களுத்துறை மற்றும் பயாகல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.