கேள்வி
நான் ஒருவரைக் காதலித்தேன். இந்த விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிந்துவிட்டது. வெளிநாடு செல்வதற்காக அவர் வீட்டில் சில காலம் தங்கியிருந்தேன். அப்போது இருவரும் பல முறை எல்லை மீறிவிட்டோம். இப்பொழுது அவரை எனக்குப் பிடிக்கவில்லை. என் வீட்டார் எனக்கு வெளிநாட்டு மாப்பிள்ளை பார்க்கிறார்கள். இப்போது நான் என்ன செய்ய?
பதில்
இந்தக் கேள்வி, உங்களைப் பற்றிய ஒரு வித்தியாசமான உருவகத்தை கற்பனை செய்யத் தூண்டுகிறது. மேலும், எதனால் உங்கள் காதல் பிடிக்காமல் போனது என்ற காரணத்தைத் தெளிவாக நீங்கள் குறிப்பிடவில்லை.
ஏன் உங்களுக்கு அவரைப் பிடிக்கவில்லை? உங்களுக்கு வெளிநாட்டு மாப்பிள்ளை பார்ப்பதனாலா? உள்ளூரில் காதலனுடன் வாழ்வதைவிட, வெளிநாட்டு மாப்பிள்ளையுடன் வாழும் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பா?
திருமணத்துக்கு முன் மனங்களை வேண்டுமானால் பரிமாறிக்கொள்ளலாம்; உடல்களைப் பரிமாறிவிடக் கூடாது. அப்படிச் செய்துவிட்டால், அதிலுள்ள சுவாரசியம் போய்விடும். போய்விட்டால், இப்படித்தான் எண்ணத் தோன்றும்.
ஒரு குழந்தை ஒரு விளையாட்டுப் பொருளைக் கேட்டு அடம்பிடித்து அழும். அதே விளையாட்டுப் பொருளை வாங்கித் தந்தவுடன், கொஞ்சநாள் விளையாடும். பின்னர் அந்த விளையாட்டுப்பொருள் அந்தக் குழந்தைக்கு அலுத்துவிடும். துரதிர்ஷ்டவசமாக, பல ஆண்களும், பெண்களும், தாம்பத்திய உறவிலும் இதே போக்கையே கடைப்பிடிக்கிறார்கள். நீங்களும் அப்படித்தான் போலும்!
உங்கள் மனதில், வெளிநாட்டு மோகம் வேர்விட்டு வளர்ந்திருப்பதாகவே தெரிகிறது. எப்போது உங்கள் காதலைப் பிரியத் துணிந்துவிட்டீர்களோ, இனி அந்தக் காதலை அல்லது காதலனைப் பற்றி நீங்கள் கவலைகொள்ளத் தேவையில்லை. உங்கள் விருப்பப்படி வெளிநாட்டு மாப்பிள்ளையுடனேயே உங்கள் வாழ்க்கையைத் தொடரலாம். அதுதான் உங்களுக்கும் உங்கள் முன்னாள் காதலருக்கும் நல்லது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM