283 ஓட்டங்களுடன் சகல விக்கெட்களையும் இழந்தது மேற்கிந்தியத் தீவுகள்

02 Dec, 2022 | 03:33 PM
image

அவுஸ்திரேலியாவுடனான முதலவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி தனது முதல் இன்னிங்ஸில் 283 ஓட்டங்களுடன் சகல விக்கெட்களையும் இழந்தது.

அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நடைபெறும் இப்போட்டியில் அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்புக்கு 598 ஓட்டங்களைப்பெற்ற நிலையில் துடுப்பாட்டத்தை நிறுத்திக் கொண்டிருந்தது.

2 ஆவது நாள் ஆட்டமுடிவில் மேற்கிந்திய அணி முதல் இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 74 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

போட்டியின் 3 ஆவது நாளான இன்று அவ்வணி 283 ஓட்டங்களுடன் சகல விக்கெட்களையும் இழந்தது.

ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் கிறேத் ப்றேத்வெயட் 64 ஓட்டங்களையும்  அறிமுக வீரர் டேஜாநாரின் சந்தர்போல் 51 ஓட்டங்களையும் பெற்றனர். வேறு எவரும் அரைச்சதம் பெறவில்லை.

அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர்களில் பட் கம்மின்ஸ் 34 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மிசெல் ஸ்டார்க் 51 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.   

நேதன் லியோன் 61 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார். கெமரோன் கிறீன் 35 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் ஜோஸ் ஹஷல்வூட் 53 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 

இன்று மாலை தனது 2 ஆவது இன்னிங்ஸை ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணி ஆட்டமுடிவின்போது  ஒரு விக்‍கெட் இழப்புக்கு 29  ஓட்டங்களைப் பெற்றிருந்தது.  உஸ்மான் கவாஜா 5 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

தற்போது அவுஸ்திரேலிய அணி  344 ஓட்டங்களால் முன்னிலையில் உள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மகளிர் உலகக் கிண்ண இலங்கை குழாத்தில்...

2023-02-01 18:31:57
news-image

வார இறுதியில் இலங்கை மாஸ்டர்ஸ் கூடைப்பந்தாட்டம்

2023-02-01 18:36:17
news-image

பாரிஸ் 2024 ஒலிம்பிக், பராலிம்பிக் அதிகாரி...

2023-02-01 14:38:17
news-image

விசா பிரச்சினை காரணமாக கவாஜாவின் இந்திய...

2023-02-01 13:35:40
news-image

உலகக் கிண்ணத்திற்கான நேரடி தகுதியைக் குறிவைத்து...

2023-02-01 12:27:41
news-image

உலகக் கிண்ணத்தை 3ஆவது தொடர்ச்சியான தடவையாக...

2023-01-31 20:22:35
news-image

பங்களாதேஷ் அணியின் பயிற்றுநராக மீண்டும் சந்திக்க...

2023-01-31 16:19:24
news-image

நான் எந்தவொரு அரசியல் கட்சியையும் சாராதவன்...

2023-01-31 13:48:55
news-image

ஹிமாஷவின் போட்டித் தடை 6 ஆண்டுகளாக...

2023-01-31 15:26:53
news-image

19 வயதுக்குட்பட்ட மகளிர் இருபதுக்கு 20...

2023-01-31 09:59:01
news-image

இங்கிலாந்தை வீழ்த்திய தென்னாபிரிக்கா உலகக் கிண்ணத்தில்...

2023-01-31 09:45:22
news-image

கனிஷ்ட உலகக் கிண்ணத்துடன் சிரேஷ்ட உலகக்...

2023-01-30 22:27:12