பனீர் கட்லெட்

By Ponmalar

02 Dec, 2022 | 03:13 PM
image

தேவையான பொருட்கள்

பனீர்-100 கிராம்

உருளைக்கிழங்கு - 1 கப் (மசித்தது)

பொட்டுக்கடலை - 50 கிராம் (பொடித்து வைத்தது)

முட்டை - 1

வெங்காயம் - 2

கொத்தமல்லி - சிறிதளவு

பச்சை மிளகாய் - 2

சிக்கன் 65 பொடி -1 ஸ்பூன்

சீரகம் - கால் ஸ்பூன்

இஞ்சி,வெ.பூண்டு விழுது - 2 ஸ்பூன்

உப்பு - தேவைக்கு

பட்டர் - தேவையான அளவு

செய்முறை

கொத்தமல்லி,பச்சைமிளகாய்,வெங்காயம் ஆகியவற்றை பொடியாய் நறுக்கவும்.

ஒரு பாத்திரத்தில் பட்டர் தவிர்த்து அனைத்தையும் சேர்த்து கலந்துக்கொள்ளவும்.

பனீர்,முட்டையில் உள்ள ஈரப்பதமே போதுமானது. தேவைப்பட்டால் மட்டும் நீர் தெளித்து வடை மாவு பக்குவத்தில் பினைந்து வைக்கவும்.

அரை மணி நேரம் ஊறிய பின் சிறு உருண்டை எடுத்து வட்டமாக தட்டி தவாவில் பட்டர் விட்டு பொரித்தெடுக்கவும்.

மிதமான தீயில் இதனை செய்ய வேண்டும்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right