மறைந்த தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா ஜெயராமுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது அனுதாபத்தை தெரிவித்துள்ளார்.

இந்திய தமிழ் சமூகத்தின் இதயங்களை கொள்ளைகொண்டவர்  தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா. எனது அனுதாபங்களை அவரது குடும்பத்தினருக்கும் தமிழக மக்களுக்கும் தெரிவித்துக்கொள்கின்றேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் தனது அனுதாபத்தை தெரிவித்துள்ளார்.