முருங்கை கீரையின் மருத்துவ குணங்கள்!

Published By: Ponmalar

02 Dec, 2022 | 03:13 PM
image

முருங்கை மரத்தை பொறுத்த வரை முருங்கைக்காய், முருங்கைப் பூ, முருங்கைக்கீரை இவை அற்புதமான மருந்துப் பொருளாகும். இதில் விட்டமின் ஏ, பி, சி சத்துக்களும், சுண்ணாம்புச்சத்து, புரதம், இரும்பு, கந்தகம், குளோரின், தாமிரம், கல்சியம், மக்னீஷியம் போன்ற சத்துக்களும் உள்ளன.

முருங்கைக்கீரையோடு, பூண்டு, மஞ்சள், உப்பு, மிளகு சேர்த்து அரைத்து உண்டால் நாய்க்கடி குணமாகும். முருங்கைக்கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும்.

வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மலசிக்கல் நீங்கும். முருங்கை இலையை எடுத்துவிட்டு காம்புகளை நறுக்கி மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கும். 

முருங்கை இலைகளில் இரும்புச் சத்து, சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றது.

முருங்கை இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டியாகும். முடி நீண்டு வளரும். நரை முடி குறையும். தோல் வியாதிகள் நீங்கும்.

முருங்கைக்கீரை மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. 

வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ முருங்கைக்கீரையை உணவாக உபயோகித்தால் ரத்தமும், சிறுநீரும் சுத்தம் அடைகின்றன. வாய்ப்புண் வராதபடி பாதுகாப்பு உண்டாகிறது.

முருங்கைக்கீரை சூப் மூட்டு வலியையும் போக்க வல்லது. கர்ப்பப்பையின் குறைகளை போக்கி கருத்தரிப்பதை ஊக்குவித்து பிரசவத்தை துரிதப்படுத்தும். 

முருங்கை இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்த்தம், தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹண்டிங்டன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-03-26 16:32:47
news-image

இடியோபதிக் பல்மனோரி ஃபைப்ரோசிஸ் எனும் நுரையீரல்...

2024-03-24 21:02:07
news-image

அர்த்ரால்ஜியா எனும் மூட்டு வலி பாதிப்பிற்குரிய...

2024-03-20 21:20:55
news-image

செபோர்ஹெக் கெரடோசிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2024-03-20 09:17:28
news-image

குரல்வளை வீக்கம் : நவீன சிகிச்சை

2024-03-18 18:23:28
news-image

ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் ரெட்டினோபதி எனும் விழித்திரை பாதிப்பிற்குரிய...

2024-03-16 14:38:19
news-image

உள்காது பாதிப்புகளை கண்டறிவதற்கான நவீன பரிசோதனைகள்

2024-03-15 18:16:00
news-image

பெருங்குடல் வீக்கமும் நவீன சிகிச்சையும் 

2024-03-14 16:20:48
news-image

சிறுநீரக ஆரோக்கியம், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!...

2024-03-14 15:59:51
news-image

ஆசனவாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சத்திர...

2024-03-13 22:50:05
news-image

மயோகார்டிடிஸ் எனும் இதய தசையில் ஏற்படும்...

2024-03-08 17:40:06
news-image

நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்...

2024-03-07 13:48:04