சண்டியர்களை கொண்டு மக்கள் போராட்டத்தை முடக்க முயற்சித்தால் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் - சரத் பொன்சேகா

Published By: Vishnu

02 Dec, 2022 | 09:39 PM
image

(இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்)

சண்டியர்களை கட்டுப்படுத்தாமல் உரிமைக்காக போராடும் மக்களை காலி முகத்திடலில் இருந்து வெளியேற்றும் பொலிஸாரின் செயற்பாடுகள் வெட்ககேடானது. 

சண்டியர்களை கொண்டு மக்கள் போராட்டத்தை முடக்க முயற்சித்தால் அது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை புதிதாக குறிப்பிட வேண்டிய தேவை இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (2)  இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சுற்றாடல் அமைச்சு, வனஜீவராசிகள் மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சு,சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

யானை மற்றும் வனஜீவராசிகள் சுதந்திரம் மற்றும்  மிருகங்களின் நலன் தொடர்பில் அவதானம் செலுத்தப்படுகிறது. தற்போது இந்த நாட்டில் விலங்குகளுக்கு உள்ள சுதந்திரம் கூட மனிதர்களுக்கு இல்லை. போராட்டத்தில் ஈடுபட முடியாத நிலையில் உள்ளது, உரிமைகள் மறுக்கப்படுகின்றன.

சிரேஷ்ட சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்கு உட்பட தரப்பினர் காலி முகத்திடலில் அண்மையில் அமைதி வழி போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இந்த இடத்திற்கு சண்டியர்கள் வருகை தந்து அவர்களின் சுற்றுலாத்துறை சேவை,முச்சக்கர வண்டி சேவைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்கள்.

மே 09 ஆம் திகதி தினத்தை போல் சண்டியர்களை கொண்டு போராட்டத்தை முடக்க முயற்சித்தால் ஏற்படும் விளைவு எத்தன்மையில் அமையும் என்பதை புதிதாக குறிப்பிட வேண்டிய தேவையில்லை. சண்டியர்கள் போராட்ட இடத்திற்கு சென்ற போது பொலிஸார் செயற்பட்ட விதம் வெட்ககேடானது.

சுண்டி சண்டியர்களை பாதுகாக்காமல் உரிமைக்காக போராட்டத்தில் ஈடுப்படுபவர்களை காலி முகத்திடலில் இருந்து பொலிஸார் வெளியேற்றும் போது பொலிஸாரின் சீருடை கௌரவம் எவ்வாறு பாதுகாக்கப்படும்.இவ்வாறான செயற்பாடுகள் நாட்டில் இடம்பெற கூடாது.

சர்வதேச உதைபந்தாட்ட போட்டி கட்டார் நாட்டில் இடம்பெறுகிறது. கட்டார் நாட்டின் இளவசர் உணர்வுபூர்வமாக, ஒழுக்கமாக,முறையாக,வெளிப்படைத்தன்மையுடன் இந்த விளையாட்டு போட்டினை ஒழுங்குப்படுத்தி சிறந்த முறையில் நடத்துகிறார்.இவர்களை சிறந்த உதாணமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

எமது நாட்டில் அரசராகும் கனவுடன் இளவரசர் ஒருவர் கடந்த காலங்களில் இருந்தார்.கட்டார் நாட்டு இளவரசருக்கு கிடைத்த உதைப்பந்தாட்ட போட்டி போன்று செயற்திட்டம் ஒன்று இவருக்கு கிடைத்தால் எவ்வாறு இருக்கும் என்று நினைத்து பார்த்தேன்,வங்குரோத்து நிலை அடைந்துள்ள நாட்டில் மிகுதியாக உள்ள வளம் கூட மோசடி செய்யப்பட்டிருக்கும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43