சார்லி நடிக்கும் 'உடன்பால்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Published By: Nanthini

02 Dec, 2022 | 03:10 PM
image

மிழ் திரையுலகில் முதல் முறையாக கலாநிதி பட்டம் வென்ற நடிகர் சார்லி கதாநாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'உடன்பால்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் கார்த்திக் சீனிவாசன் இயக்கத்தில் தயாராகியுள்ள 'உடன்பால்' படத்தில் சார்லி, லிங்கா, காயத்ரி, அபர்னதி, விவேக் பிரசன்னா, தீனா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

மதன் கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்துக்கு சக்தி பாலாஜி இசையமைத்திருக்கிறார். 

வித்தியாசமான குடும்ப கதையாக உருவாகியுள்ள இந்த படத்தை டி கம்பெனி எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. வி. துரை தயாரித்திருக்கிறார்.

படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆஹா தமிழ் டிஜிட்டல் தளத்தில் நேரடியாக வெளியாகவிருக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. 

ஃபர்ஸ்ட் லுக்கில் காணப்படும் பிரியாணி செய்யும் அகன்ற பாத்திரத்தில் சார்லி உறங்கிக்கொண்டிருக்க, அவரை பாத்திரத்துடன் நடிகர்களும் நடிகைகளும் சுமந்துசெல்வது போன்ற தோற்றம் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்