முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ திவிநெகும நிதியை மோசடி செய்ததாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை சட்டமா அதிபர் வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளார்.

இதேவேளை பசில் ராஜபக்ஷ வெளிநாடு செல்வதற்கான தடையும் நீதிமன்றத்தால் இன்று நீக்கப்பட்டுள்ளது.

திவிநெகுமவுக்கு சொந்தமான 50 இலட்சம் ரூபா நிதியில் நாட்காட்டிகள் அச்சிட்டமை தொடர்பான வழக்கே இவ்வாறு வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.