மட்டக்களப்பு கல்வி வலயத்தின் 100 நாள் செயற்றிட்டத்தின் கீழ் மட்டக்களப்பு வலயப் பாடசாலைகளுக்கு இடையிலான மகளிர் கால்பந்தாட்ட சுற்றுப்போட்டி மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டி மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு கண்ணகி மஹா வித்தியாலயத்தின் அதிபர் அ.குலேந்திரராஜா தலைமையில் வித்தியாலயத்தின் விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களின் ஒருங்கமைப்பில் நடத்தப்பட்டது.
மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட 14, 16 மற்றும் 19 வயதுப் பிரிவுகளில் 19 அணிகள் பங்குகொண்ட இச்சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டிகள் நேற்று (டிச. 1) மாலை நடைபெற்றன.
இச்சுற்றுப் போட்டியில் 14 வயதுப் பிரிவில் புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலய அணியும், 16 வயதுப் பிரிவில் மட்டக்களப்பு மகாஜன கல்லூரி அணியும், 19 வயதுப் பிரிவில் புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலய அணியும் முதலாவது இடத்தினை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்த பரிசளிப்பு நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் கு.சுஜாதா, சிறப்பு அதிதிகளாக கோட்ட கல்வி பணிப்பாளர், கோட்ட பாடசாலை அதிபர்களும், கௌரவ அதிதிகளாக நிகழ்வுக்கான அனுசரணையாளர்களும் கலந்து சிறப்பித்ததுடன், வெற்றியீட்டிய மாணவர்களுக்கான வெற்றிக்கிண்ணங்களும் சான்றிதழ்களும் அதிதிகளினால் வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM