ஐஎஸ் அமைப்பின் நெய்ல் பிரகாஸ் துருக்கியிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு நாடு கடத்தப்பட்டார்;

By Rajeeban

02 Dec, 2022 | 12:17 PM
image

துருக்கியிலிருந்து நாடு கடத்தப்பட்ட ஐஎஸ் அமைப்பை சேர்ந்த நெய்ல் பிரகாசை அதிகாரிகள் இன்று டார்வின் நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.

நெய்ல் பிரகாசிற்கு எதிராக அதிகாரிகள் ஆறு குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர்.

ரப் கலைஞரான 31 வயது நெய்ல் பிரகாஸ் 2014 இல் ஐஎஸ் அமைப்புடன் இணைந்தார்.2016 இல் மோதல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக இவர் சிரியா சென்றார் என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் பிரகாசிற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம்.

இதேவேளை நெய்ல் பிரகாசை ஒன்பதாம் திகதிக்கு முன்னர் நொதேர்ன் டெரிட்டரியிலிருந்து  விக்டோரியாவிற்கு மாற்றுவதற்கு நீதிபதி அனுமதி வழங்கியுள்ளார்.

விக்டோரியா காவல்துறையினர் நெய்ல் பிரகாசை மெல்பேர்னிற்கு கொண்டு செல்வதற்கு முன்னர்  அவர் தொடர்ந்தும் டார்வினில் தடுத்துவைக்கப்படுவார்.

பால்மேர்ஸ்டன் கண்காணிப்பு இல்லத்திலிருந்து வீடியோவில் தோன்றிய நெய்ல்பிரகாஸ் விசாரணையின் போது கைகள் பிணைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டார்.

தனது சார்பில் எவரும் வாதிடுவதை விரும்பாத அவர்  தனது அடையாளத்தை உறுதிப்படுத்துமாறு நீதிபதி வேண்டுகோள் விடுத்தவேளை அமைதியாக காணப்பட்டார்.

தழும்புகள் மற்றும் டட்டுக்கள் மூலம் நெய்ல் பிரகாசை அடையாளம் கண்டுள்ளதாக பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பழனியில் அகற்றப்பட்ட தமிழ் இறையோன் முப்பாட்டன்...

2023-02-08 12:00:40
news-image

பூகம்பம் தாக்கிய பகுதிகளில் வசித்த நான்கு...

2023-02-08 12:03:57
news-image

துருக்கி பூகம்பத்தில் சிக்கிய பூனை மீட்பு

2023-02-08 12:18:12
news-image

துருக்கி, சிரியாவில் பூகம்பத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை...

2023-02-08 10:22:35
news-image

பூகம்பத்தைத் தொடர்ந்து துருக்கி துறைமுகத்தில் தீ

2023-02-08 09:32:08
news-image

துருக்கி நாட்டுக்காக வேலைவாய்ப்பு நேர்முகப் பரீட்சை...

2023-02-08 09:18:08
news-image

பூகம்பம் - தொப்புள்கொடி துண்டிக்கப்படாத நிலையில்...

2023-02-08 06:11:56
news-image

வியட்நாம் யுத்தத்தில் தென் கொரிய படையினரின்...

2023-02-07 17:56:14
news-image

பூகம்ப இடிபாடுகளிற்குள் சிக்குண்டுள்ள மக்கள் குரல்செய்திகளை...

2023-02-07 20:59:10
news-image

அதானிக்கு ஏற்ற விதத்தில் இந்தியாவின் வெளிவிவகார...

2023-02-07 16:22:30
news-image

அமெரிக்க லொத்தர் சீட்டிழுப்பில் 27,605 கோடி ...

2023-02-07 16:08:31
news-image

பூகம்பம் - 23 மில்லியனிற்கும் அதிகமானவர்கள்...

2023-02-07 15:46:00