அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மிசெல் மார்ஷ் 3 மாத காலம் போட்டிகளில் பங்குபற்றமாட்டார் என அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.
அவரின் கணுக்காலில் சத்திரசிகிச்சை செய்யப்பட்டமையே இதற்கான காரணம்.
மிசெல் மார்ஷின் இடது கணுக்காலில் நேற்று சத்திரசிகிச்சை செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால், இருபது20 பிக்பாஷ் லீக்கில் நடப்புச் சம்பியனான பேர்த் ஸ்கோர்சஸ் அணி சார்பில் இவ்வருட பிக்பாஷ் போட்டிகளில் மார்ஷ் பங்குபற்ற மாட்டார்.
அதேவேளை, இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளின்போது அவர் மீண்டும் டெஸ்ட் அணியில் சேர்க்கப்படும் வாய்ப்பும் பாதிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் பெப்ரவரி மாதங்களில் இந்தியாவுக்கு அவுஸ்திரேலிய அணி சுற்றுலா மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அவுஸ்திரேலிய கிரிக்கெட் தேர்வுக்குழுவின் தலைவர் ஜோர்ஜ் பெய்லி இது தொடர்பாக கூறுகையில், 'மிசெல் மார்ஷ் எதுகுழாமின் முக்கியமான அங்கத்தவர். குணமடையும் காலத்தில் நாம் அவருக்கு ஆதரவு வழங்குவோம். எதிர்வரும் மார்ச் மாதம் இந்தியாவுடனான ஒருநாள் சர்வதேச தொடருக்கு அவர் சேர்க்கப்பட முடியும் என நாம் நம்புகிறோம்' என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM