உலகின் செலவு குறைந்த நகரங்கள் பட்டியலில் கொழும்பு

By T. Saranya

02 Dec, 2022 | 01:32 PM
image

உலகில் வாழ்வதற்கான செலவு குறைந்த நகரங்களின் பட்டியலில் கொழும்பு இடம்பெற்றுள்ளது.

லண்டனைச் சேர்ந்த பொருளாதார புலனாய்வு பிரிவு (Economist Intelligence Unit) என்ற ஆய்வு அமைப்பு, உலக நகரங்களை தரவரிசைப்படுத்தி ஆண்டுதோறும் பட்டியல் வெளியிட்டு வருகிறது.

அந்த அமைப்பின் இந்தாண்டுக்கான உலகின் வாழ்வதற்கான செலவு குறைந்த முதல் பத்து நகரங்களில் கொழும்பு இடம்பெற்றுள்ளது.

தரவரிசையில் 161 வது இடத்தில் கொழும்பு இந்தியாவின் பெங்களூருவுடன் இணைந்துள்ளது. 

உலகில் மிகவும் செலவு குறைந்த நகரங்களாக டமஸ்கஸ், திரிபோலி மற்றும் தெஹ்ரான் ஆகியவை அடையாளம் காணப்பட்டுள்ளன. இது அந்த நாடுகளின் பலவீனமான பொருளாதாரம் மற்றும் பணவீக்கத்தை பிரதிபலிக்கிறது.

2022 ஆம் ஆண்டில் உலகின் அதிக செலவு கொண்ட முதல் 10 நகரங்கள் 

சிங்கபூர் மற்றும் நியூயோர்க் நகரங்கள் உலகின் அதிக செலவு கொண்ட நகரங்களில் முதலாவது இடத்தை பிடித்துள்ளன.

இஸ்ரேலின் டெல் அவிவ் நகரம் அதிக செலவு கொண்ட  நகரங்களில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

ஹொங்கொங் மற்றும் லொஸ் ஏஞ்சல்ஸ் அதிக செலவு கொண்ட நகரங்களில் நான்காவது இடத்தை பிடித்துள்ளன.

சுவிட்ஸர்லாந்தின் சூரிச் அதிக செலவு கொண்ட நகரங்களில் ஆறாவது இடத்தை பிடித்துள்ளது.

ஜெனீவா அதிக செலவு கொண்ட நகரங்களில் ஏழாவது இடத்தை பிடித்துள்ளது.

சென் பிராசிஸ்கோ அதிக செலவு கொண்ட நகரங்களில் எட்டாவது இடத்தை பிடித்துள்ளது.

பாரிஸ் அதிக செலவு பிடிக்கும் நகரங்களில் ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளது.  

கோபன்ஹேகன் மற்றும் சிட்னி  ஆகியன அதிக செலவு பிடிக்கும் நகரங்களில் பத்தாவது  இடம் பிடித்துள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பயங்கரவாதத்தடைச்சட்டத்தை இல்லாதொழிக்கவும் - அமெரிக்கா, பிரிட்டன்,...

2023-02-01 22:38:54
news-image

பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் பரிந்துரைகளும் சுயதீர்மானங்களும்...

2023-02-01 22:58:31
news-image

அரச சேவையாளர்களின் கொடுப்பனவை மட்டுப்படுத்துவதை தவிர...

2023-02-01 18:44:00
news-image

உள்ளூராட்சிமன்ற சபைத் தேர்தல் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தாது...

2023-02-01 22:59:39
news-image

தேசிய மனித உரிமைகள் செயற்திட்டம் இலங்கை...

2023-02-01 18:46:53
news-image

பாராளுமன்ற குழுக்களின் தலைமைத்துவ பதவியை ஆளும்...

2023-02-01 23:00:37
news-image

அதிகரிக்கிறது பெற்றோலின் விலை !

2023-02-01 22:28:16
news-image

வேட்பாளர்கள் செலுத்திய கட்டுப்பணத்திற்கு என்ன நடந்தது...

2023-02-01 22:33:15
news-image

உள்ளூராட்சிமன்ற சபைகளை கலைக்கும் அதிகாரம் எமக்கு...

2023-02-01 18:47:56
news-image

13 ஐ அமுல்படுத்தினால் தமிழ் -...

2023-02-01 18:44:58
news-image

சிங்கள- தமிழ் இனக்கலவரம் மீண்டும் தோற்றம்...

2023-02-01 18:45:41
news-image

இலங்கை வழமைக்கு திரும்ப அமெரிக்கா தொடர்ந்தும்...

2023-02-01 18:43:08