குழந்தையின் நாக்கை சுத்தம் செய்யும்போது...

By Devika

02 Dec, 2022 | 10:55 AM
image

குழந்தையின் ஒவ்வொரு உறுப்­பையும் சுத்தம் செய்வது அவசியம். ஆனால், அனைத்து உறுப்புகளையும் சாதாரணமான முறையில் சுத்தம் செய்ய முடியாது. சில கவன முறைகள் அவசியமாகிறது. சில உறுப்புகளை மித­மான, கவனமான முறையில் கையாள்வதே நல்லது. அந்த வகையில் நாக்கை எவ்வாறு சுத்தம் செய்வது என பார்க்கலாம். 

பொதுவாக பற்கள், ஈறுகளை சுத்தம் செய்ய கவனம் செலுத்துவோமே தவிர நாக்கை விட்டு விடுவோம். தாய்ப்பால், புட்டி பால் குடிக்கும் குழந்தைகளின் நாக்கில் வெள்ளையாக மாவுப்போல படியும். குழந்தை சிரிக்கும்போது நாக்கை சுத்தம் செய்ய முயற்சித்தால், குழந்தை முகத்தைத் திருப்பிக்கொள்ளும். தாங்­களாக வலுக்­கட்­டாய­மாக நாக்கை சுத்தம் செய்ய முயற்­சித்தாலும் குழந்தை காண்பிக்காது. 

ஆனால், நாக்கை சுத்­தம் செய்யாவிட்டால் கிரு­மிகளின் பாதிப்பு இருக்­கும். 

நாக்கை சுத்தம் செய்ய டிப்ஸ் 

சுத்தமான, மென்மை­யான துண்டை எடுத்துக்­கொள்ளுங்கள். இளஞ்­சூடான தண்ணீரில் துண்டை நனைத்துக் கொள்ளுங்கள். நனைத்த துண்டை, உங்கள் விரலில் சுற்றி குழந்தையின் நாக்கை சுத்தப்படுத்துங்கள். தண்ணீர் மிகவும் சூடாக இருக்கக் கூடாது. எப்­போதும் குழந்தையின் நாக்கை சுத்தம் செய்ய எளிமையான வழி, குழந்தையின் கீழ் உதடை கீழ் நோக்கி ஹோல்ட் செய்த பின் நாக்கை சுத்தப்படுத்துங்கள். 

சில குழந்தைகளுக்கு நாக்கில் மாவு போல மிக அழுத்தமாக ஒட்டி இருக்கும். அதை எடுக்க, இளஞ்சூடான நீரில் சிறிதளவு கல்லுப்பு போட்டு கரைத்துக் கொள்ளுங்கள். இந்தத் தண்ணீரில் துண்டை நனைத்து குழந்தையின் நாக்கை சுத்தம் செய்யலாம். 

அழுத்தமான மாவு போல ஒட்டியி­ருப்ப­தும் நீங்கும். கவனம். குழந்தையின் நாக்கு மிகவும் மென்மையானது என்­பதால் மிதமான அழுத்தம் கொடுத்து சுத்தம் செய்யுங்கள். 

பால், உணவு சாப்பிட்ட பிறகு குழந்தை­யின் கன்னம், வாய், பற்கள், ஈறுகள், நாக்கு ஆகியவை சுத்தம் செய்யலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹைபர்டிராபிக் அப்ஸ்ட்ரக்டிவ் கார்டியோமயோபதி எனும் திடீர்...

2023-02-08 12:27:00
news-image

தொண்டையில் கிச்...கிச்.... தொந்தரவா.....?

2023-02-08 12:18:50
news-image

அம்ப்ளிக்கல் கிரானுலோமா எனப்படும் தொப்புள் கட்டி...

2023-02-07 15:36:13
news-image

குடல் எரிச்சல் பாதிப்பை ஃபுட்மாப் (FODMAP)...

2023-02-06 13:47:17
news-image

அயோட்டிக் டிஸெக்ஷன் எனப்படும் இதய தமனி...

2023-02-04 13:31:54
news-image

மூளை கட்டி பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2023-02-02 16:56:07
news-image

பிரபலமடைந்து வரும் யெயர்த்திங் தெரபி

2023-02-01 17:35:35
news-image

குழந்தைகளுக்கு குறட்டை வருவது ஏன்?

2023-02-01 11:51:33
news-image

இளம் பெண்களை அதிகம் பாதிக்கும் ஹீமோகுளோபின்...

2023-02-01 11:09:27
news-image

ஸ்கின் கிராப்டிங் எனப்படும் தோல் பொறுத்தும்...

2023-01-31 16:23:50
news-image

குழந்தைகளுக்கு ஏற்ற தேங்காய் எண்ணெய் தயாரிப்பு

2023-01-30 12:35:06
news-image

ஸ்லீப் பரலைஸ் எனும் உறக்க பக்கவாதப்...

2023-01-30 11:30:54