ரஷ்ய படையெடுப்பு ஆரம்பித்த பின்னர் சுமார் 13,000 யுக்ரைனிய படையினர் உயிரிழந்திருக்கலாம் என யுக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கியின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்துள்ளார்.
10,000 முதல் 13,000 படையினர் உயிரிழந்திருக்கலாம் என உத்தியோகபூர்வமாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது என யுக்ரைனின் செனல் 24 அலைவரிசையிடம் மிகாலியோ போடோலியாக் தெரிவித்துள்ளார்.
பெப்ரவரி 24 ஆம் திகதி ரஷ்ய படையெடுப்பு ஆரம்பித்த பின்னர் 100,000 வரையான ரஷ்ய படையினர் கொல்லப்பட்டிருகு;கலாம் எனவும், மேலும் 100,000 முதல் 150,000 ரஷ்ய படையினர் காயமடைந்திருக்கலாம் அல்லது காணாமல் போயிருக்கலாம் அல்லது மீண்டும் போருக்குத் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டிருக்கலாம் எனவும் போடொலியாக் கூறியுள்ளார்.
யுக்ரைனில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான ரஷ்ய படையினர் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது காயமடைந்திருக்கலாம் என அமெரிக்க இராணுவ உயர் அதிகாரி ஜெனரல் மார்க் மைலி கடந்த மாதம் கூறியிருந்தார்.
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் சேர்ஜி ஷோய்கு கடந்த செப்டெம்பர் மாதம் இது தொடர்பாக கூறுகையில், 7 மாத காலத்தில் 5937 ரஷ்ய படையினர் உயிரிழந்துள்ளனர் எனக் கூறியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM