கொஸ்டா ரிக்காவை வீழ்த்தியும் 2ஆம் சுற்று வாய்ப்பை இழந்தது ஜேர்மனி

By Digital Desk 5

02 Dec, 2022 | 10:10 AM
image

(நெவில் அன்தனி)

கொஸ்டா ரிக்காவுக்கு எதிராக அல் பெய்த் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (01) நடைபெற்ற ஈ குழுவுக்கான தனது கடைசி லீக் போட்டியில் 4 - 2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் ஜேர்மனி வெற்றிபெற்றபோதிலும் இரண்டாவது தொடர்ச்சியான தடவையாக  2ஆம் சுற்று வாய்ப்பை இழந்தது.

ஜப்பானுக்கும் ஸ்பெய்னுக்கும் இடையிலான போட்டி முடிவில் தங்கியிருந்த முன்னாள் உலக சம்பியன் ஜேர்மனி கட்டாய வெற்றிக்காக கொஸ்டா ரிக்காவை எதிர்கொண்டது.

ஆனால், ஸ்பெய்னை ஜப்பான் வெற்றிகொண்டதால் நிகர கோல் வித்தியாச அடிப்படையில் ஜேர்மனியின் இரண்டாம் சுற்று நழுவிப்போனது.

போட்டியின் 10ஆவது நிமிடத்தில் சேர்ஜி ஞாப்றி போட்ட கோலுடன் ஜேர்மனி முன்னிலை அடைந்தது.

இடைவேளைவரை இந்த கோலுடன் முன்னலையில் இருந்த ஜேர்மனி, இடைவேளைக்குப் பின்னர் தடுமாற்றத்துடன் காணப்பட்டது.

இடைவேளை முடிந்து ஆட்டம் தொடர்ந்த 7ஆவது நிமிடத்தில் ஸ்பெய்னுடான போட்டியில் ஜப்பான் 2 கோல்களை அடுத்தடுத்து புகுத்தி முன்னிலையில் இருப்பதாக ஜேர்மனிக்கு தெரியவந்தது.

இதனை அடுத்து பயிற்றுநர் ஹன்சி ப்லிக், அணியில் மாற்று வீரர்களை களம் இறக்கி அதிக கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவதற்கு முயற்சித்தார். ஆனால் அவரது எண்ணம் ஈடேறவில்லை.

எனினும்   கொஸ்டா ரிக்கா 58ஆவது நிமிடத்தில் யெல்டிஷ் டெஜேடா மூலம் கோல் நிலையை சமப்படுத்தியது.

12 நிமிடங்கள் கழித்து ஜேர்மனி அணித் தலைவர் கோல் காப்பாளர் மெனுவல் நோயர் பந்தை தனது சொந்த கோலினுள் தவறுதலாக தட்டிவிட்டு கொஸ்டா ரிக்காவை முன்னிலையில் இடச் செய்தார்.

எனினும் 3 நிமிடங்கள் கழித்து ஜேர்மனி சார்பாக காய் ஹாவேர்ட்ஸ் கோலை நிலையை சமப்படுத்தினார்.

போட்டியின் கடைசிக் கட்டத்தில் 4 நிமிட இடைவெளியில் மேலும் 2 கோல்கைள ஜேர்மனி போட்டது.

85ஆவது நிமிடத்தில் காய் ஹாவேர்ட்ஸ் தனது 2ஆவது கோலைப் போட்டதுடன் 89ஆவது நிமிடத்தில் நிக்லாஸ் ஃபுல்கேர்க் அணியின் 4ஆவது கோலை போட்டார்.

இறுதியில் ஜேர்மனி 4 - 2 என வெற்றிபெற்றபோதிலும் நிகர கோல்கள் வித்தியாசம் அதன் 2ஆம் சுற்று வாய்ப்பை இல்லாமல்  செய்தது.

குழு ஈ அணிகளின் இறுதி நிலை

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

துருக்கி பூகம்பத்தில் கால்பந்தாட்ட வீரர் பலி

2023-02-08 11:23:55
news-image

சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட்டிலிருந்து ஆரோன்...

2023-02-07 15:23:16
news-image

இருபதுக்கு 20 உலகக் கிண்ண பயிற்சிப்...

2023-02-07 15:35:37
news-image

மகளிர் உலகக் கிண்ண கால்பந்தாட்டத்துக்கு  சவூதி...

2023-02-07 14:42:05
news-image

இரட்டைச் சதம் விளாசிய சந்தர்போலின் மகன்...

2023-02-07 15:01:00
news-image

மேற்கிந்தியத் தீவுகளுக்கான 33 வருட ஆரம்ப...

2023-02-07 14:07:13
news-image

முதல் சுற்றுடன் வெளியேறினார் சானியா

2023-02-07 11:50:49
news-image

6 பந்துகளில் 6 சிக்ஸர்களை பறக்கவிட்ட...

2023-02-07 11:25:04
news-image

அனைவருக்கும் ஆசிய விளையாட்டு விழா என்பதை...

2023-02-07 09:59:15
news-image

மாஸ்டர்ஸ் கூடைப்பந்தாட்ட இறுதியில் 76ers, ஓல்ட்...

2023-02-06 21:15:15
news-image

சர்வதேச போட்டிகளில் நடுநிலை வீரர்களாக  பங்குபற்ற...

2023-02-06 16:46:25
news-image

பங்கபந்து கபடி சம்பியன்ஷிப் தொடரில் தமிழ்...

2023-02-06 14:53:21