அருள்நிதி நடிப்பில் 'டிமான்டி காலனி 2' படப்பிடிப்பு ஆரம்பம்

By Nanthini

02 Dec, 2022 | 09:45 AM
image

டிகர் அருள்நிதி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 'டிமான்டி காலனி' படத்தின் இரண்டாம் பாகத்துக்கான படப்பிடிப்பு தொடங்கியிருக்கிறது.

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் 2015ஆம் ஆண்டில் வெளியான திரைப்படம் 'டிமான்டி காலனி'. 

ஹொரர், த்ரில்லராக தயாரான இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பாரிய வெற்றியை பெற்றது. 

படம் வெளியாகி ஏழு ஆண்டுகள் கழித்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது. முதல் பாகத்தை இயக்கிய இயக்குநர் அஜய் ஞானமுத்துவே இந்த இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார். 

படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியிருக்கிறது. நடிகர் அருள்நிதி கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில், அவருக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். 

தீபக் டி மேனன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்துக்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார். 

ஞானமுத்து பட்டறை எனும் பட நிறுவனம் சார்பில் இயக்குநர் அஜய் ஞானமுத்து தயாரிக்கிறார்.

விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளிவந்த 'கோப்ரா' திரைப்படம், எதிர்பார்த்த வெற்றியை பெறாததால் அதிருப்தியடைந்த இயக்குநர், தன் திறமையை நிரூபிப்பதற்காக 'டிமான்டி காலனி' படத்தின் இரண்டாம் பாகத்தை உடனடியாக தயாரித்து, இயக்கி வருகிறார் என திரையுலக வணிகர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right