வருமான வரி கணக்கை சமர்ப்பிப்பதற்கான காலவகாசம் நீடிப்பு - நிதி இராஜாங்க அமைச்சர்

By T. Saranya

02 Dec, 2022 | 10:32 AM
image

(இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்)

வருமான வரி கணக்கை சமர்ப்பிப்பதற்கான காலவகாசம் இன்னும் ஒருவார காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. பத்திர சமர்ப்பிப்பு தாமதமாக்கப்பட்டமைக்கு எவ்வித தண்டபணம் அறவிடப்படமாட்டாது என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க சபையில் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

தனி நபர் வருமானம், நிறுவன வருமானம் மற்றும் பங்குடமை தொடர்பான வருமானம் உள்ளிட்ட வருமானங்களின் வரி பத்திரங்களை சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட காலவகாசம் இன்னும் ஒருவார காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த வருமானம் தொடர்பான பத்திரங்களை கடந்த நவம்பர் மாதம் 30 ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்குமாறு குறித்த தரப்பினருக்கும், நிறுவனங்களுக்கும் அறிவிக்கப்பட்டது.இருப்பினும் பல்வேறு காரணிகளினால் பத்திர சமர்ப்பிப்பு முழுமைப்படுத்தப்படவில்லை.

ஆகவே வருமான வரி கணக்கு தொடர்பான விபரங்களை சமர்ப்பிப்பதற்கு ஒருவார காலவகாசம் வழங்கப்பட்டுள்ளது.ஒருவார காலத்திற்குள் சமர்ப்பிக்கப்படும் பத்திரங்கள் 2022.11.30 ஆம் திகதியன்று சமர்ப்பித்தாக பதிவதற்கு நிதி அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது.கணக்கு பததிரங்களை சமர்ப்பிப்பதற்கு ஏற்பட்ட காலவகாசத்திற்கு எவ்வித தண்டப்பணமும் அறவிடப்படமாட்டாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் பரிந்துரைகளும் சுயதீர்மானங்களும்...

2023-02-01 22:58:31
news-image

அரச சேவையாளர்களின் கொடுப்பனவை மட்டுப்படுத்துவதை தவிர...

2023-02-01 18:44:00
news-image

உள்ளூராட்சிமன்ற சபைத் தேர்தல் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தாது...

2023-02-01 22:59:39
news-image

தேசிய மனித உரிமைகள் செயற்திட்டம் இலங்கை...

2023-02-01 18:46:53
news-image

பாராளுமன்ற குழுக்களின் தலைமைத்துவ பதவியை ஆளும்...

2023-02-01 23:00:37
news-image

அதிகரிக்கிறது பெற்றோலின் விலை !

2023-02-01 22:28:16
news-image

வேட்பாளர்கள் செலுத்திய கட்டுப்பணத்திற்கு என்ன நடந்தது...

2023-02-01 22:33:15
news-image

உள்ளூராட்சிமன்ற சபைகளை கலைக்கும் அதிகாரம் எமக்கு...

2023-02-01 18:47:56
news-image

13 ஐ அமுல்படுத்தினால் தமிழ் -...

2023-02-01 18:44:58
news-image

சிங்கள- தமிழ் இனக்கலவரம் மீண்டும் தோற்றம்...

2023-02-01 18:45:41
news-image

இலங்கை வழமைக்கு திரும்ப அமெரிக்கா தொடர்ந்தும்...

2023-02-01 18:43:08
news-image

மக்களை வஞ்சிக்காத சபையை நாம் அமைப்போம்...

2023-02-01 18:42:09