இலங்கை கிரிக்கெட் அணி வீரர் வனிந்து ஹசரங்கவுக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐசிசி) அபராதம் விதித்ததுடன் எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
நடுவரின் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தமையே இதற்குக் காரணம்.
பல்லேகலையில் நேற்று நடைபெற்ற ஆப்கானிஸ்தானுடனான 3 ஆவது ஒருநாள் போட்டியின்போது, ஆப்கான் வீரர் நஜிபு;லலாஹ் ஸத்ரான் ஆட்டமிழந்ததாக கள நடுவர் அறிவித்தார். ஆனால், டி.ஆர்.எஸ். மீளாய்வின் பின்னர் ஸத்ரான் ஆட்டமிழக்கவில்லை என அறிவிக்கப்பட்டது.
இதனால் வனிந்து ஹசரங்க அதிருப்தியடைந்து முறையற்ற விதமாக நடந்ததாக குற்றம் சுமத்தப்பட்டது. அவர் கிரிக்கெட் வீரர்களுக்கான நடத்தைக் கோவையின் 2.8 ஆவது பிரிவை மீறியதாக கள நடுவர்கள், 3,4 ஆம் நடுவர்களால் குற்றம் சுமத்தப்பட்டது.
அதையடுத்து, வனிந்து ஹசரங்கவின் போட்டி ஊதியத்தில் 50 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டதுடன், அவரின் புள்ளியொன்றும் குறைக்கப்பட்டது.அத்துடன் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. ஐ.சி.சி. சிறப்பு மத்தியஸ்தர் குழாம் அங்கத்தவரான ரஞ்சன் மடுகல்ல இத்தண்டனைகளை முன்மொழிந்தார்.
தனது தவறை ஹசரங்க ஏற்றுக்கொண்டதால், இது குறித்து விசாரணை நடத்தப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM