'காரி' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சசிகுமார் நடிப்பில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் 'நந்தன்' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
'கத்துக்குட்டி', 'உடன்பிறப்பே' ஆகிய படங்களின் இயக்குநர் இரா. சரவணன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'நந்தன்'.
இதில் சசிகுமார் கதாநாயகனாகவும், அவருக்கு ஜோடியாக 'பிக் பொஸ்' புகழ் ஸ்ருதி பெரியசாமியும் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் அழுத்தமான வேடத்தில் இயக்குநரும் நடிகருமான பாலாஜி சக்திவேல் நடித்திருக்கிறார்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில்,
''புதுக்கோட்டை பகுதியில் வாழும் நிலக்கிழார் ஒருவருக்கும், அவருடைய நிலத்தில் பணியாற்றும் கூலி தொழிலாளிகளுக்கும் இடையேயான வணிக உறவை மையப்படுத்தி திரைக்கதை உருவாகியிருக்கிறது.
கூலி தொழிலாளிகளின் வாழ்வியலையும், அவர்கள் ஒடுக்கப்பட்டிருக்கும் பின்னணியையும் இப்படத்தில் விவரித்திருக்கிறோம். இப்படத்துக்காக நாயகன் சசிகுமார் தனது தோற்றத்தை முற்றிலுமாக மாற்றியமைத்துக் கொண்டிருக்கிறார்.
குறிப்பாக, அவருடைய பற்களில் வெற்றிலை பாக்கு கறையை ஏற்படுத்திக்கொள்ள தொடர்ச்சியாக ஒன்றரை மாதம் எப்போதும் வெற்றிலை பாக்கு போடும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டார்.
அவரது மனைவியாக நடித்திருக்கும் புதுமுக நடிகை ஸ்ருதி பெரியசாமி, வீதியோரத்தில் பக்கற்றுகளில் அடைத்து விற்கப்படும் முந்திரியை விற்கும் பெண்மணியாக நடித்திருக்கிறார்.
நிலக்கிழாராக இயக்குநர் பாலாஜி சக்திவேல் நடித்திருக்கிறார்.
இந்த திரைப்படம் மண் சார்ந்த படைப்பாகவும், அனைத்து தரப்பினரையும் கவரும் படைப்பாகவும் உருவாகி இருக்கிறது'' என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM