மேற்கிந்திய அணியுடனான டெஸ்ட்டில்  லபுஷேன், ஸ்மித் இரட்டைச் சதங்கள் குவிப்பு

By Sethu

01 Dec, 2022 | 05:31 PM
image

மேற்கிந்தியத் தீவுகளுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்புக்கு 598 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் தனது முதல் இன்னிங்ஸை நிறுத்திக் கொண்டது. 

அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நேற்று இப்போட்டி ஆரம்பமாகியது. முதல் நாள் ஆட்டமுடிவின்போது அவுஸ்திரேலியா 2 விக்கெட் இழப்புக்கு 293 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

2 ஆவது நாளான இன்று அவுஸ்திரேலியாவின் மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித் இருவரும் இரட்டைச் சதங்களைக் குவித்தனர்.

மார்னஸ் லபுஷேன்,  350 பந்துகளில் ஒரு சிக்ஸர், 20 பவுண்டறிகள் உட்பட 204 ஓட்டங்களைக் குவித்தார். இது அவரின் 8 ஆவது டெஸ்ட் சதம் என்பதுடன், 2 ஆவது இரட்டைச் சதமும் ஆகும்.

ஸ்டீவ் ஸ்மித் 311 பந்துகளில் 17 பவுண்டறிகள் உட்பட ஆட்டமிழக்காமல் 200 ஓட்டங்களைக் குவித்தார். ஸ்டீவ் ஸ்மித்தின் 29 டெஸ்ட் சதம் இதுவென்பதுடன் அவரின் 4 ஆவது இரட்டைச் சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது,

ட்ரேவிஸ் ஹெட் 95 பந்துகளில் 99 ஓட்டங்களைப் பெற்றார். 

ஸ்மித் 200 ஓட்டங்களைப் பெற்றவுடன் அவுஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸை முடித்துக் கொண்டது.

மேற்கிந்திய பந்துவீச்சாளர்களில் கிறேக் ப்ராத்வெய்ட் 65 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார். கீல் மேயர்ஸ் 39 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் ஜேடன் சீல்ஸ் 95 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இன்று தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த மேற்கிந்தியத் தீவுகள் அணி,  25 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 74 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

கிறேக் ப்ராத்வெய்ட் ஆட்டமிழக்காமல் 18 ஓட்டங்களைப் பெற்றார். தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் டேஜாநாரின் சந்தர்போல் ஆட்டமிழக்காமல் 47 ஓட்டங்களைப் பெற்றிருந்திருந்தார். இவர் மேற்கிந்திய அணியின் முன்னாள் வீரர் ஷிவ்நாரின் சந்தர்போலின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது,

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மகளிர் உலகக் கிண்ண இலங்கை குழாத்தில்...

2023-02-01 18:31:57
news-image

வார இறுதியில் இலங்கை மாஸ்டர்ஸ் கூடைப்பந்தாட்டம்

2023-02-01 18:36:17
news-image

பாரிஸ் 2024 ஒலிம்பிக், பராலிம்பிக் அதிகாரி...

2023-02-01 14:38:17
news-image

விசா பிரச்சினை காரணமாக கவாஜாவின் இந்திய...

2023-02-01 13:35:40
news-image

உலகக் கிண்ணத்திற்கான நேரடி தகுதியைக் குறிவைத்து...

2023-02-01 12:27:41
news-image

உலகக் கிண்ணத்தை 3ஆவது தொடர்ச்சியான தடவையாக...

2023-01-31 20:22:35
news-image

பங்களாதேஷ் அணியின் பயிற்றுநராக மீண்டும் சந்திக்க...

2023-01-31 16:19:24
news-image

நான் எந்தவொரு அரசியல் கட்சியையும் சாராதவன்...

2023-01-31 13:48:55
news-image

ஹிமாஷவின் போட்டித் தடை 6 ஆண்டுகளாக...

2023-01-31 15:26:53
news-image

19 வயதுக்குட்பட்ட மகளிர் இருபதுக்கு 20...

2023-01-31 09:59:01
news-image

இங்கிலாந்தை வீழ்த்திய தென்னாபிரிக்கா உலகக் கிண்ணத்தில்...

2023-01-31 09:45:22
news-image

கனிஷ்ட உலகக் கிண்ணத்துடன் சிரேஷ்ட உலகக்...

2023-01-30 22:27:12