ஷங்கர் - ராம்சரண் கூட்டணியில் பெயரிடப்படாத படம் : நியூசிலாந்தில் படப்பிடிப்பு நிறைவு

By Nanthini

01 Dec, 2022 | 06:54 PM
image

ந்திய திரையுலகின் பிரம்மாண்ட இயக்குநரான ஷங்கர் இயக்கத்தில் தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகரான ராம்சரண் தேஜா கதாநாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு நியூசிலாந்தில் நடைபெற்றது. 

தற்போது அந்த படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

தற்போது இந்திய திரையுலகில் பான் இந்திய திரைப்படங்கள் பிரம்மாண்டமான பட்ஜெட்டில், சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் நடைபெறுவது வழக்கமாகிவிட்டது. 

அந்த வகையில் ராம்சரண் தேஜா நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக பொலிவுட் நடிகை கைரா அத்வானி நடிக்கிறார்.

இவருடன் ஜெயராம், ஸ்ரீகாந்த், அஞ்சலி, சுனில் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். 

திரு ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்துக்கு தமன்.S இசையமைக்கிறார். தெலுங்கின் முன்னணி தயாரிப்பாளரான தில்ராஜ் இந்த படத்தை தயாரிக்கிறார்.

இது தொடர்பாக படக்குழுவினர் பேசுகையில், 

''15 கோடி ரூபாய் செலவில் நியூசிலாந்து நாட்டில் படப்பிடிப்பு நடைபெற்றது. இந்த படப்பிடிப்பில் நாயகன் ராம்சரண் தேஜா மற்றும் நாயகி கைரா அத்வானி ஆகியோர் பங்குபற்றிய பாடல் காட்சி படமாக்கப்பட்டது. அத்துடன் கதைக்களத்தோடு தொடர்புடைய சில காட்சிகளும் படமாக்கப்பட்டது" என்றனர்.

'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படத்துக்குப் பிறகு தமிழக ரசிகர்களிடையே புகழ்பெற்ற ராம்சரண் தேஜா நடிப்பில், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் தயாராகி வரும் இந்த பெயரிடப்படாத படத்தின் நியூசிலாந்து படப்பிடிப்பு நிறைவு பெற்றிருப்பதையடுத்து, படக்குழுவினரின் அடுத்த கட்ட படப்பிடிப்பு எங்கு நடைபெறும் என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right