உள்ளூராட்சி சபை பெண் உறுப்பினர் ஒருவருக்குச் சொந்தமான மோட்டார் சைக்கிளின் குத்தகை தவணைக் கட்டணத்தை செலுத்த தவறியதாகக் கூறி அவரின் மோட்டார் சைக்கிளை கைப்பற்ற வந்தவர்களால் தள்ளப்பட்டதில் அவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாதுவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
களுத்துறை பிரதேச சபையின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் லசந்தி ஹேமமாலா என்ற பெண்ணே இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த பெண் உறுப்பினர் நிதி நிறுவனம் ஒன்றின் மூலம் மோட்டார் சைக்கிள் ஒன்றைப் பெற்றுள்ளார். இவர் கொரோனா காலகட்டத்தில் பல தடவைகள் குத்ததைக்கான தவணைக் கட்டணத்தை செலுத்த தவறியுள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து நேற்று (30) மாலை அவரது மோட்டார் சைக்கிளைக் கைப்பற்ற வந்தவர்களால் (சீஸர்கள்) குறித்த பெண்ணை தள்ளிவிட்டு அவர்கள் மோட்டார் சைக்கிளை எடுத்துச் சென்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM