பிரபல தயாரிப்பாளர் கே.முரளிதரன் மாரடைப்பால் காலமானார்!

By Vishnu

01 Dec, 2022 | 06:58 PM
image

தமிழ்த் திரையுலகின் பிரபல தயாரிப்பாளர் கே.முரளிதரன் மாரடைப்பு காரணமாக இன்று (01) மதியம் கும்பகோணத்தில் காலமானார். அவருக்கு வயது (65).

பிரபல தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளரும், ‘லட்சுமி மூவி மேக்கர்ஸ்’ நிறுவனத்தின் தலைவர்களில் ஒருவருமானவர் கே.முரளிதரன். இவர், ‘லட்சுமி மூவி மேக்கர்ஸ்’ நிறுவனத்தின் தலைவர்கள் சுவாமிநாதன் மற்றும் வேணுகோபால் ஆகியோருடன் இணைந்து ‘அரண்மனை காவலன்’, ‘மிஸ்டர் மெட்ராஸ்’, ‘கோகுலத்தில் சீதை’, ‘தர்மச் சக்கரம்’, ‘பிரியமுடன்’, ‘உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்’, ‘உன்னைத் தேடி’, ‘உனக்காக எல்லாம் உனக்காக’, ‘கண்ணன் வருவான்’, ‘உள்ளம் கொள்ளை போகுதே’, ‘உன்னை நினைத்து’, ‘பகவதி’, ‘அன்பே சிவம்’, ‘புதுப்பேட்டை’, ‘சிலம்பாட்டம்’ உள்ளிட்ட ஏராளமான வெற்றி படங்களை தயாரித்துள்ளார்.

அத்துடன், ஏராளமான படங்களை விநியோகமும் செய்துள்ளார். தயாரிப்பாளர்கள் சங்கத்திலும் பொறுப்பு வகித்துள்ளார். கடைசியாக, சுராஜ் இயக்கத்தில், ஜெயம் ரவி நடித்த ‘சகலகலா வல்லவன்’ திரைப்படத்தை தயாரித்தார்.

இந்நிலையில், தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் வசித்து வந்த முரளிதரன், மாரடைப்பு காரணமாக இன்று (டிச.1-ம் தேதி) மதியம் 1.30 மணிக்கு காலமானார். 

அவருடைய திடீர் மறைவு திரையுலகினர் வட்டத்தில், குறிப்பாக தயாரிப்பாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முரளிதரன் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right