உலகக் கிண்ண வலைபந்தாட்டத்தில் சி குழுவில் ஆசிய சம்பியன் இலங்கை

By Vishnu

01 Dec, 2022 | 06:58 PM
image

(என்.வீ.ஏ.)

தென் ஆபிரிக்காவில் அடுத்த வருடம் ஜூலை மாதம் நடைபெறவுள்ள 16ஆவது உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில் ஆசிய  சம்பியன்  இலங்கை சி குழுவில் இடம்பெறுகிறது.

தென் ஆபிரிக்காவின் ஈஸ்ட் லண்டன் கொன்வென்ஷன் நிலையத்தில் புதன்கிழமை (30) நடைபெற்ற பகிரங்க குலுக்கல் மூலம் 16 அணிகள் குழுநிலைப்படுத்தப்பட்டது.

குலுக்கல் மூலம் அணிகள் குழுநிலைப்படுத்தப்பட்டபோது சி குழுவில் இலங்கையுடன் உலக தரவரிசையில் 4ஆம் இடத்திலுள்ள ஜெமெய்க்கா, 5ஆம் இடத்திலுள்ள வரவேற்பு நாடு தென் ஆபிரிக்கா, 9ஆம் இடத்திலுள்ள வேல்ஸ் ஆகிய அணிகள் இடம்பெறுகின்றன.

இங்கிலாந்தின் லிவர்பூரில் 2019இல் நடைபெற்ற உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில் சிங்கப்பூரை மாத்திரம் வீழ்த்தி 15ஆம் இடத்தைப் பெற்ற இலங்கை, உலக தரவரிசையில் 16ஆம் இடத்தில் இருக்கிறது.

இது இவ்வாறிருக்க நடப்பு உலக சம்பியன் நியூஸிலாந்து டி குழுவிலும் 2019இல் இரண்டாம் இடத்தைப் பெற்ற அவுஸ்திரேலியா ஏ குழுவிலும் இடம்பெறுகின்றன.

சிங்கப்பூரில் கடந்த செப்டெம்பர் மாதம் நடைபெற்ற ஆசிய கிண்ண வலைபந்தாட்ட இறுதிப் போட்டியில் இலங்கையிடம் தோல்வி அடைந்த சிங்கப்பூர் டி குழுவில் இடம்பெறுகிறது.

குலுக்கல் மூலம் அணிகள் குழுநிலைப்படுத்தப்பட்ட நிகழ்ச்சி உத்தியோகபூர்வமாக உலகம் முழுவதும் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. 

இந்த நிகழ்ச்சியில் தென் ஆபிரிக்காவின் தேசிய மற்றும் மாகாண அரசுகளின் பிரதிநிதிகள், வலைபந்தாட்ட உலகக் கிண்ணம் 2023 பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், உலக வலைபந்தாட்ட சம்மேளன பிரதிநிதிகள், நெட்போல் சவுத் ஆபிரிக்கா பிரிதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மகளிர் உலகக் கிண்ண இலங்கை குழாத்தில்...

2023-02-01 18:31:57
news-image

வார இறுதியில் இலங்கை மாஸ்டர்ஸ் கூடைப்பந்தாட்டம்

2023-02-01 18:36:17
news-image

பாரிஸ் 2024 ஒலிம்பிக், பராலிம்பிக் அதிகாரி...

2023-02-01 14:38:17
news-image

விசா பிரச்சினை காரணமாக கவாஜாவின் இந்திய...

2023-02-01 13:35:40
news-image

உலகக் கிண்ணத்திற்கான நேரடி தகுதியைக் குறிவைத்து...

2023-02-01 12:27:41
news-image

உலகக் கிண்ணத்தை 3ஆவது தொடர்ச்சியான தடவையாக...

2023-01-31 20:22:35
news-image

பங்களாதேஷ் அணியின் பயிற்றுநராக மீண்டும் சந்திக்க...

2023-01-31 16:19:24
news-image

நான் எந்தவொரு அரசியல் கட்சியையும் சாராதவன்...

2023-01-31 13:48:55
news-image

ஹிமாஷவின் போட்டித் தடை 6 ஆண்டுகளாக...

2023-01-31 15:26:53
news-image

19 வயதுக்குட்பட்ட மகளிர் இருபதுக்கு 20...

2023-01-31 09:59:01
news-image

இங்கிலாந்தை வீழ்த்திய தென்னாபிரிக்கா உலகக் கிண்ணத்தில்...

2023-01-31 09:45:22
news-image

கனிஷ்ட உலகக் கிண்ணத்துடன் சிரேஷ்ட உலகக்...

2023-01-30 22:27:12