மறைந்த ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு, பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உள்ளிட்டோர் சென்னை வருகின்றனர்.

அப்பல்லோ வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த ஜெயலலிதாவின் உடல் சென்னை ராஜாஜி அரங்கில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. 

ஜெயலலிதாவின் உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

இந்நிலையில், ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு, பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உள்ளிட்டோர் சென்னை வருகின்றனர். 

டாக்டர் அம்பேத்கர் இறந்த தினத்தை முன்னிட்டு இன்று அவருக்கு டெல்லியில் மரியாதை செலுத்திவிட்டு பின்னர் சென்னைக்கு மோடி செல்ல உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்துவதற்கு சென்னை வருகின்றனர்.

கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்துவதற்கு சென்னை வருகிறார்.