(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்)
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் சித்திரவதைகளுக்கு எதிர்ப்புத்தெரிவித்து பாராளுமன்ற பெண் எம்.பி.க்கள் செம்மஞ்சள் நிற சேலைகளுடன் சபைக்கு வந்தனர்.
பாராளுமன்றம் இன்று வியாழக்கிழமை (1) காலை 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய போதே பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பாராளுமன்ற பெண் எம்.பி.க்கள் செம்மஞ்சள் நிற சேலைகளுடன் சபைக்கு வந்தனர்.
இன்று முதல் 16நாட்களுக்கு உலகம் பூராகவும் பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அனைத்துவகையான சித்திரவதைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே இவ்வாறு சேலை அணிந்துவந்தனர்.
இவர்களுக்கு ஆதரவாக ஜனாதிபதி, அமைச்சர்கள் உள்ளிட்ட ஆண் எம்.பி.க்கள் கைகளில் செம்மஞ்சள் நிற பட்டிகளை கட்டியிருந்தனர். இதன்போது பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக கருத்துக்களை முன்வைத்த சபை முதல்வரான கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிரான இன்றைய தினம் (நேற்றைய ) தொடர்பில் தனக்கு முன்னரே தெரிந்திருந்தால் தானும் செம்மஞ்சள் பட்டி அணிந்து வந்திருப்பேன் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM