இளையோர் லீக் கிரிக்கெட் : கொழும்பு தெற்கு சம்பியனானது

By Nanthini

01 Dec, 2022 | 07:39 PM
image

(என்.வீ.ஏ.)

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் நடத்தப்பட்ட ப்ரீமா 15 வயதுக்குட்பட்ட இளையோர் லீக் கிரிக்கெட் போட்டியில் கொழும்பு தெற்கு வலய பாடசாலைகள் அணி சம்பியனானது.

கொழும்பு தெற்கு, கொழும்பு வடக்கு, கண்டி, காலி, தம்புள்ளை ஆகிய வலயங்களுக்கு இடையில் நடத்தப்பட்ட இந்த சுற்றுப் போட்டியின் இறுதி ஆட்டம் வர்த்தக க்ரிக்கெட் சங்க (MCA) மைதானத்தில் அண்மையில் நடைபெற்றது.

இதன் இறுதிப் போட்டியில் கொழும்பு வடக்கு வலய பாடசாலைகள் அணியை 3 விக்கெட்களால் வெற்றிகொண்டு கொழும்பு தெற்கு வலய பாடசாலைகள் அணி சம்பியன் பட்டத்தை சூடியது.

தக்சிலா கல்லூரி வீரர் ரொஷான் நவஞ்சனவின் சிறப்பான பந்துவீச்சு, நாலந்த கல்லூரி வீரர் ஹிருக் சில்வா குவித்த அரைச் சதம் என்பன கொழும்பு தெற்கு அணியின் வெற்றியில் பிரதான பங்காற்றின.

கொழும்பு வடக்கு அணித் தலைவர் கித்ம சித்மல் தனது அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதை தேர்ந்தெடுத்தார்.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு வடக்கு 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து, 148 ஓட்டங்களை பெற்றது.

21.2 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 51 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்ட கொழும்பு வடக்கு அணிக்கு 7ஆவது விக்கெட்டில் ரச்சின்த டி சில்வாவும் ஓசந்த பமுதித்தவும் பகிர்ந்த பெறுமதிமிக்க 78 ஓட்ட இணைப்பாட்டம் பலம் சேர்த்தது.

ரச்சின்த டி சில்வா 45 ஓட்டங்களையும், ஓசந்த பமுதித்த 35 ஓட்டங்களையும் பெற்றனர்.

கொழும்பு தெற்கு பந்துவீச்சில் ரொஷான் நவஞ்சன 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் தேனுஷ யாப்பா 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொழும்பு தெற்கு 45.5 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து, 151 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

ஆரம்ப வீரர் ஹிருக்க சில்வா 6 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 61 ஓட்டங்களைப் பெற்றார். அவருக்கு அடுத்ததாக தெவிந்து வேவல்வல 20 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார்.

பந்துவீச்சில் கித்ம சித்மல் 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும், லஹிரு லக்மால் 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும்   கைப்பற்றினர்.

இறுதிப் போட்டி நாயகனாக ஹிருக்க சில்வா தெரிவானார்.

சுற்றுப் போட்டியின் சிறந்த துடுப்பாட்டக்காரராக பபாசர திசாநாயக்கவும் (தம்புள்ளை), சிறந்த பந்துவீச்சாளராக தினுஜ சமரரத்னவும் (கொழும்பு வடக்கு), தொடர்நாயகனாக தமேஷ் மதிஷானும் (தம்புள்ளை) தெரிவாகி விருதுகளை வென்றெடுத்தனர்.

இந்த சுற்றுப் போட்டிக்கு ப்ரீமா பூரண அனுசரணை வழங்கியது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

துருக்கி பூகம்பத்தில் கால்பந்தாட்ட வீரர் பலி

2023-02-08 11:23:55
news-image

சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட்டிலிருந்து ஆரோன்...

2023-02-07 15:23:16
news-image

இருபதுக்கு 20 உலகக் கிண்ண பயிற்சிப்...

2023-02-07 15:35:37
news-image

மகளிர் உலகக் கிண்ண கால்பந்தாட்டத்துக்கு  சவூதி...

2023-02-07 14:42:05
news-image

இரட்டைச் சதம் விளாசிய சந்தர்போலின் மகன்...

2023-02-07 15:01:00
news-image

மேற்கிந்தியத் தீவுகளுக்கான 33 வருட ஆரம்ப...

2023-02-07 14:07:13
news-image

முதல் சுற்றுடன் வெளியேறினார் சானியா

2023-02-07 11:50:49
news-image

6 பந்துகளில் 6 சிக்ஸர்களை பறக்கவிட்ட...

2023-02-07 11:25:04
news-image

அனைவருக்கும் ஆசிய விளையாட்டு விழா என்பதை...

2023-02-07 09:59:15
news-image

மாஸ்டர்ஸ் கூடைப்பந்தாட்ட இறுதியில் 76ers, ஓல்ட்...

2023-02-06 21:15:15
news-image

சர்வதேச போட்டிகளில் நடுநிலை வீரர்களாக  பங்குபற்ற...

2023-02-06 16:46:25
news-image

பங்கபந்து கபடி சம்பியன்ஷிப் தொடரில் தமிழ்...

2023-02-06 14:53:21