யோகி பாபு நடித்த 'காசேதான் கடவுளடா' படத்தின் வெளியீட்டுத் திகதி அறிவிப்பு

By Nanthini

01 Dec, 2022 | 03:48 PM
image

மிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நட்சத்திர நடிகரான யோகி பாபு முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'காசேதான் கடவுளடா' எனும் படத்தின் வெளியீட்டுத் திகதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆர். கண்ணன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் 'காசேதான் கடவுளடா'. 

1972ஆம் ஆண்டில் கதாசிரியரும்  இயக்குநருமான சித்ராலயா கோபு இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'காசேதான் கடவுளடா'. இந்த திரைப்படத்தின் மறு உருவாக்கமாக இப்படம் தயாராகி இருக்கிறது. 

இதில் யோகி பாபு, மிர்ச்சி சிவா, மனோபாலா, புகழ், கருணாகரன், ஊர்வசி, சிவாங்கி, பிரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரசன்னா எஸ். குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்துக்கு ராஜ் பிரதாப் இசையமைத்திருக்கிறார். 

முழு நீள நகைச்சுவை படமாக தயாராகியுள்ள இந்த படத்தை மசாலா பிக்ஸ் எனும் நிறுவனத்தின் சார்பில் இயக்குநர் ஆர். கண்ணன் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், முன்னோட்டம் மற்றும் சிங்கிள் ட்ராக் ஆகியவை வெளியாகி மில்லியன் கணக்கில் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது. 

இந்நிலையில் படத்தின் வெளியீட்டுத் திகதி  அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் இந்த திரைப்படம் டிசம்பர் மாதம் 23ஆம் திகதியன்று பட மாளிகையில் வெளியாகிறது.

50 ஆண்டுகளுக்கு முன் வெளியான 'காசேதான் கடவுளடா' படத்தை தற்காலத்துக்கு ஏற்ற வகையில் மறு உருவாக்கம் செய்திருப்பதால், படத்துக்கான எதிர்பார்ப்பு இளைய தலைமுறை ரசிகர்களிடத்தில் அதிகமாகியிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right