கொவிட் கட்டுப்பாடுகளிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் குறித்த சமூக ஊடக பதிவுகளை விரும்புபவர்களை தண்டிக்கும் நடவடிக்கைகளில் சீனா ஈடுபடவுள்ளதாக சிஎன்என் தெரிவித்துள்ளது.
சீனாவில் சட்டவிரோதமான அல்லது பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய சமூக ஊடக பதிவுகள் என அதிகாரிகள் கருதுபவற்றை விரும்பும் சமூக ஊடக பயனாளர்கள் தண்டிக்கப்படும் நிலை உருவாகிவருகின்றது.
இதனை தொடர்ந்து உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரம் இணையபாவனையை கட்டுப்படுத்த முயல்கின்றது என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
சீனாவின் கொவிட் தொடர்பான கட்டுப்பாடுகள் குறித்து மக்கள் மத்தியில் சீற்றம் அதிகரித்துவரும் நிலையில் இணையவெளியில் அதிருப்தி வெளியாவதை கட்டுப்படுத்துவதற்காக அதிகாரிகள் தங்கள் ஒடுக்குமுறைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதேவேளை சீனாவின் இணைய கண்காணிப்பு அமைப்பு இணையவெளி தொடர்பான கட்டுப்பாடுகள் விதிமுறைகளை மேலும் அதிகரிக்கின்றது.
சீனாவின் சைபர் அதிகாரசபை வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகள் டிசம்பர் 15ம் திகதி நடைமுறைக்குவரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சீனா சைபர்வெளி நிர்வாகம் என்ற அமைப்பு ஜனாதிபதி ஜி ஜின்பிங் தலைமையிலான மத்திய சைபர்வெளி விவகார ஆணைக்குழுவின் கீழ் செயற்படுகின்றது.
சமூக ஊடகங்களில் கவனத்தை பெற்றுள்ள இந்த விதிமுறைகள் கொவிட் கட்டுப்பாடு தொடர்பில் சீனாவில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்ற சில வாரங்களில் நடைமுறைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சீன தலைநகர் முதல் சங்காய் வரை வார இறுதியில் பல நகரங்களில் நாட்டின் மிகமோசமான கொவிட் கட்டுப்பாடுகளை நீக்க கோரியும், அரசியல் சுதந்திரத்தை கோரியும் ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
இணைய பாவனையாளர்கள் ஆர்ப்பாட்டங்கள் தொடர்பான பதிவுகளை ஸ்கிறீன் சொட் எடுத்து அவற்றை சேகரிக்கின்றனர்.தணிக்கையை தவிர்ப்பதற்காக அவர்கள் சங்கேத மொழிகளை - இரகசிய குறியீடுகளை பயன்படுத்துகின்றனர்.
அதேவேளை அதிகாரிகள் இணையத்தில் வெளியாகும் அதிருப்தியை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்த நிலையிலேயே சீனா இணைய பாவனை தொடர்பான புதிய விதிமுறைகைள அறிவித்துள்ளது - இவை 2017 இல் வெளியிடப்பட்ட விதிமுறைகளின் அடுத்த கட்டமாக காணப்படுகின்றன.
எனினும் எவ்வாறான விடயங்கள் சட்டவிரோதமானவை என கருதப்படும் என்பது குறித்து அதிகாரிகள் எதனையும் தெரிவிக்கவில்லை.
ஒரு விடயத்தை விரும்புவது சட்டவிரோதமானது என்றால் அந்த விடயத்திற்கு பெரும் ஆதரவுள்ளது என அர்த்தம் என தெரிவிக்கின்றார் ஹொங்கொங் பல்கலைகழக பேராசிரியர் டேவிட் வெய்க்
பல விருப்பங்கள் ஒன்று சேர்ந்தால் அது பாரிய தீயாக மாறும் என அவர் குறிப்பிடுகின்றார்.
பல நகரங்களில் உள்ள மக்கள் தங்களிற்கு இடையில் தொடர்புகொள்ளக்கூடிய நிலையில் காணப்படுகின்றனர் இதுவே சீனாவின் கம்யுனிஸ்ட் கட்சிக்கு ஆபத்தான விடயம் ஒரேநேரத்தில் பல நகரங்களில் மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதால் அதிகாரிகள் அச்சமடைந்திருக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
அதிருப்தியை வெளியிடுவோருக்கு எதிரான நடவடிக்கைகளை அதிகாரிகள் தீவிரப்படுத்துகி;ன்றனர் என்பதற்கான அடையாளம் புதிய விதிமுறைகள் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM