டிசம்பர் மாத ராசி பலன்கள் 01.12.2022 முதல் 31.12.2022 வரை

Published By: Ponmalar

01 Dec, 2022 | 03:42 PM
image

மேஷம்


வெற்றிப் பாதையைத் தெரிவு செய்து வளம் பெறும் மேஷ ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் தன ஸ்தானத்தில் அமர்வதும் லாப ஸ்தானத்தில் சந்திரன் அமர்வதும் தொழில் ஸ்தானத்தில் தொழில் ஸ்தானாதிபதியுடன் தனாதிபதி இணைவு பெறுவதும் உங்களின் வளர்ச்சிக்கும் தொழில் மேன்மைக்கும் நற்பலன்களைப் பெற்றுத் தரும். தன் திறமையை வளர்த்துக் கொண்டு மேன்மை அடையும் காலமாக அமையும். திட்டமிட்டபடி எதையும் செய்து காட்டும் உங்களின் நோக்கம் சிறப்பாக அமையும். வரும் காலம் உங்களுக்குச் சாதகமாக அமைவதால் நீங்கள் விரும்பியபடி அனைத்தும் நிறைவேறும் தொழில் சங்கப் பணிகளில் சிறப்பாகப் பணிபுரிவீர்கள். கலைத் துறையினர் வளம் பெறுவீர்கள்.

சந்திராஷ்டம நாட்கள்:
20.12.2022 செவ்வாய் இரவு 12.43 முதல் 23.12.2022 வெள்ளி அதிகாலை 04.20 மணி வரை.

அதிர்ஷ்ட நிறங்கள்:
ஒரேஞ்ச், வெண்மை, ரோஸ்.

அதிர்ஷ்ட திசைகள்:
கிழக்கு, வடக்கு, தென்கிழக்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்:
செவ்வாய், வெள்ளி, சனி.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
நவக்கிரகங்களின் கிழக்குத் திசையில் சூரியனில் இருந்து இடம் வலமாக மூன்று முறை சுற்றி வந்து வேண்டிக் கொள்ள எல்லாத் தடைகளும் நீங்கி சுபிட்சம் பெறுவீர்கள்.

ரிஷபம்
வளமான வாழ்வை வளப்படுத்திக்கொள்ள நினைக்கும் ரிஷப ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் பாக்கிய ஸ்தானத்தில் பாக்கியாதிபதியுடன் இணைவு பெறுவதும் லாபாதிபதி குரு லாப ஸ்தானத்தில் அமர்ந்து பார்ப்பதும் சிறப்புப் பலன்களைப் பெற்றுத் தரும். துணிச்சலுடன் எதையும் செய்து வருவீர்கள். அதிகாரத்தில் இருப்பவர்கள் நல்ல வளர்ச்சியைப் பெறுவீர்கள். காரியத்தில் கவனமுடன் செயற்பட்டு மேன்மை பெறுவீர்கள். தொழில் ஸ்தானத்தில் சந்திரன் அமர்வதும் ராசியில் களத்திர ஸ்தானாதிபதி செவ்வாய் அமர்வதும் உங்களின் தொழில் வளர்ச்சி மேன்மை தரும். கலைத் துறையினருக்கு நல்ல வருமானம் இருக்கும். வாகன வசதிகளைப் பெறுவீர்கள். முக்கிய விடயங்களைப் பேசித் தீர்த்துக் கொள்வீர்கள். 

சந்திராஷ்டம நாட்கள்:
23.12.2022 வெள்ளி அதிகாலை 04.21 முதல் 25.12.2022 ஞாயிறு காலை 06.53 மணி வரை.

அதிர்ஷ்ட நிறங்கள்:
வெண்மை, மஞ்சள், நீலம்.

அதிர்ஷ்ட திசைகள்:
தெற்கு, மேற்கு, வடமேற்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்:
வெள்ளி, சனி, வியாழன்.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
வெள்ளிக்கிழமை சுப்ரமணியருக்கு சிவப்புப் பூ மாலை அணிவித்து மிளகு கலந்த அன்னம் வைத்து வேண்டிக் கொள்ள எல்லா வளமும் பெறுவீர்கள்.

மிதுனம்
விரும்பியதைச் செய்து நற்பலன்களைப் பெறும் மிதுன ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு தொழில் ஸ்தானாதிபதி குரு ஆட்சி பெற்று தன ஸ்தானத்தைப் பார்வை இடுவதும் சனி பார்வை தன ஸ்தானத்தைப் பார்ப்பதும் குரு பார்வையும் கெடுபலன்களைக் குறைக்கும். கலைத்துறையினருக்கு சில கட்டுப்பாடுகளால் தொழில் முடக்கம் ஏற்பட்டாலும் வளர்ச்சி பெறுவீர்கள். முதலீடு இல்லாத தொழிலில் ஓரளவு நல்ல லாபம் கிடைக்கும். அதிக தூரம் பயணம் செய்ய வேண்டி வரும். இடத்திற்கு தகுந்தபடி உங்களின் நிலையை மாற்றிக் கொள்வீர்கள். புதிய திட்டங்களைச் செயற்படுத்துவதில் சில சிரமம் வந்து சேரும். காலத்தையும் நேரத்தையும் வீணடிக்காமல் எதையும் உடனே செய்து விடுவீர்கள். விரயாதிபதி சிலருக்கு யோகத்தைத் தருவார்.

சந்திராஷ்டம நாட்கள்:
25.12.2022 ஞாயிறு காலை 06.54 முதல் 27.12.2022 செவ்வாய் காலை 09.15 மணி வரை.

அதிர்ஷ்ட நிறங்கள்:
மஞ்சள், பச்சை, வெண்மை.

அதிர்ஷ்ட திசைகள்:
மேற்கு, வடமேற்கு, தென்கிழக்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்:
புதன், வியாழன், திங்கள்.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
சனிக்கிழமை ராகு காலத்தில் வைரவர் வழிபாடு செய்து மூன்று நல்லெண்ணெய் தீபமிட்டு உங்களின் வேண்டுதலைச் சொல்லி வர விரைவில் அனைத்தும் நடக்கும்.

கடகம்
கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளும் கடக ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு குரு பார்வை பெறுவதும் லாபாதிபதி சுக்கிரன் சனியுடன் ராசியைப் பார்ப்பதும் உங்களின் அன்றாடப் பணிகள் சிறக்கச் செய்யும். எதிலும் நிறைவான செயற்பாடுகள் அமையும். மனதில் தேவையற்ற குழப்பம் நிலைக்கும். எதிலும் அவசரப்படாமல் குறைந்த நேரத்தில் சில விடயங்களைச் செய்து முடிப்பீர்கள். திட்டமிட்ட காரியம் தடைப்பட்டாலும் அதில் சரியானபடி நடக்க வேண்டிய சூழ்நிலைகளை உருவாக்கிக்கொள்வீர்கள். அரசியலில் சிலருக்கு திடீர் பதவி கிடைக்கும். குடும்பச் சுமைகளைக் குறைத்துக்கொண்டு விரும்பியபடி சிலர் யாத்திரை சென்று வருவீர்கள். கலைத்துறையினர் புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். மாணவர்கள் கல்வி மேன்மை அடைவீர்கள். பொருளாதாரம் சிறக்கும்.

சந்திராஷ்டம நாட்கள்:
27.12.2022 செவ்வாய் காலை 09.16 முதல் 29.12.2022 வியாழன் பகல் 12.24 மணி வரை.

அதிர்ஷ்ட நிறங்கள்:
வெண்மை, மஞ்சள், ஒரேஞ்ச்.

அதிர்ஷ்ட திசைகள்:
வடக்கு, வடமேற்கு, தெற்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்:
வியாழன், வெள்ளி, சனி.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
திங்கட்கிழமை சிவாலயம் சென்று தரிசனம் செய்து வெண் நிறப் பூ வைத்து நெய் தீபமிட்டு வேண்டிக் கொள்ள சகல காரியமும் நன்மையாக அமையும்.

சிம்மம்
நினைத்ததை நினைத்தபடி செய்து காட்டும் சிம்ம ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு மறைவு ஸ்தானத்தை குரு பார்வையிடுவதும் ராசிநாதன் பஞ்சம ஸ்தானத்தில் அமர்ந்து லாப ஸ்தானத்தைப் பார்ப்பதும் நற்பலன்களை பெற்றுத் தரும். எளிமையான உங்களின் செயற்பாடுகளால் அனைத்துத் தரப்பினரையும் வசீகரிப்பீர்கள். அரசியலில் பல தடைகளையும் நீங்கி ஏற்றம் பெறுவீர்கள். உங்களின் பரம எதிரிகளை எதிர்கொண்டு வெல்வீர்கள். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். எதையும் எதிர்பார்க்காமல் திட்டமிடாமல் செய்யும் காரியம் சிறந்த பலன்களைப் பெற்றுத் தரும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்பையும் பெறுவீர்கள். தொழிலில் சிறந்த வளர்ச்சியையும் பெறுவீர்கள்.

சந்திராஷ்டம நாட்கள்:
29.12.2022 வியாழன் பகல் 12.25 முதல் 31.12.2022 சனி மாலை 05.08 மணி வரை.

அதிர்ஷ்ட நிறங்கள்:
சிவப்பு, பச்சை, ஒரேஞ்ச்.

அதிர்ஷ்ட திசைகள்:
கிழக்கு, தென்கிழக்கு, மேற்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்:
ஞாயிறு, திங்கள், செவ்வாய்.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
பிரதோஷத்தன்று கோவில் சென்று நந்தி, சிவன் தரிசனம் செய்து வலப்புறம் பிரகாரம் மூன்று முறை சுற்றி வேண்டுதலைச் சொல்லிவர சகல காரியமும் வெற்றி தரும்.

கன்னி
வளமான வாழ்க்கையை எதிர்பார்த்துச் செயற்படும் கன்னி ராசி வாசகர்களே!

இம்மாதம் ராசிநாதன் தொழில் ஸ்தானத்தைப் பார்ப்பது உங்களின் தொழில் வளர்ச்சிக்கு மேன்மை தரும். எதையும் சொன்னவுடன் செய்ய வேண்டுமென்று ஆசைப்படுவீர்கள். உலக விடயங்களில் அதிக நாட்டம் உண்டாகும். நீங்கள் பணிபுரியுமிடத்தில் எதிர்பார்த்த வளர்ச்சியைப் பெறுவீர்கள். குறைந்த முதலீடுகளில் அதிக லாபம் பெறுவீர்கள். வெகு தூரப் பயணம் மேற்கொள்வீர்கள். புதியதாக தொழில் துவங்க சிலருக்கு வாய்ப்புகள் அமையும். உங்களின் எதிர்கால நலன் கருதி எடுக்கும் முயற்சி மிகப் பெரிய வெற்றியைத் தரும். கல்வியில் மாணவர்கள் சிறந்து விளங்குவீர்கள். கலைத்துறையினர் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டம நாட்கள்:
04.12.2022 ஞாயிறு காலை 09.13 முதல் 06.12.2022 செவ்வாய் மதியம் 12.06 மணி வரையும்.

31.12.2022 சனி மாலை 05.09 முதல் 02.01.2023 திங்கள் இரவு 07.44 மணி வரையும்.

அதிர்ஷ்ட நிறங்கள்:
பச்சை, மஞ்சள், வெண்மை.

அதிர்ஷ்ட திசைகள்:
தெற்கு, தென்மேற்கு, வடக்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்:
புதன், வியாழன், வெள்ளி.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
செவ்வாய்க்கிழமைகளில் சுப்ரமணியருக்கு இலுப்பெண்ணெய் தீபமிட்டு சிவப்புப் பூ வைத்து உங்களின் வேண்டுதலைச் சொல்ல, விரைவில் அனைத்தும் நிறைவேறும்.

துலாம்
உரிமையை நிலைநாட்ட துணிச்சலுடன் செயற்படும் துலா ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு தைரிய ஸ்தானத்தில் சூரியன் அமர்கிறார். குரு தன ஸ்தானத்தையும் தொழில் ஸ்தானத்தையும் பார்வை இடுவது மிக நற்பலன்களைப் பெற்றுத் தரும். தொடர்ந்து உழைப்பால் முன்னேற்றம் அடையும் வாய்ப்பைப் பெறுவீர்கள். கடவுள் நம்பிக்கை உண்டாகும். உன்னத செயற்பாடுகளால் உங்களின் வாழ்க்கை சூழ்நிலை மாறுபடும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். மாணவர்கள் கல்வியில் மேன்மை அடைவீர்கள். கலைத்துறையினர் ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உங்களுக்குப் பிடித்தமான பொருளை பிறருக்கு விட்டுக் கொடுத்து, உங்கள் அன்பை வெளிப்படுத்துவீர்கள். பொருளாதாரம் சிறக்கும்.

சந்திராஷ்டம நாட்கள்:
06.12.2022 செவ்வாய் மாலை 04.24 முதல் 08.12.2022 வியாழன் இரவு 02.06 மணி வரை.

அதிர்ஷ்ட நிறங்கள்:
வெண்மை, நீலம், மண்ணிறம்.

அதிர்ஷ்ட திசைகள்:
மேற்கு, தென்கிழக்கு, வடக்கு,

அதிர்ஷ்ட கிழமைகள்:
வெள்ளி, சனி, திங்கள்.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
செவ்வாய்க்கிழமைகளில் சுப்ரமணியரை வணங்கி சிவப்பு நிறப் பூ வைத்து, துவரை சாதம் படைத்து வேண்டிக் கொள்ள எல்லா வளமும் பெறுவீர்கள்.

விருச்சிகம்
காலத்தை அறிந்து பயணம் செய்து வரும் விருச்சிக ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு குரு பார்வை பெறுவதும் ராசிநாதன் பார்வை பெறுவதும் திட்டமிட்ட காரியங்கள் சிறப்பாக நடக்க உதவும். முக்கியமான சில காரியங்கள் உங்களின் கவனத்தால் சிறப்பாக இயங்கும். நல்ல நண்பர்களின் சேர்க்கை பயனுள்ளதாக அமையும். தொழிற்சங்கப் பொறுப்புகளைத் திறம்படச் செய்வீர்கள். நிலம், வீட்டுமனை விற்பனையாளர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். சுமைகளாக இருந்த சில காரியங்கள் சிறப்பாக இயங்கும். விளையாட்டுத் துறை அன்பர்பகள் நல்ல வளர்ச்சியைக் காண்பீர்கள். சகோதர சகோதரிகளின் சந்திப்பு நல்ல முன்னேற்றம் தரும். எதிலும் சிறந்து விளங்குவீர்கள். பல காலமாகத் தடைப்பட்ட காரியம் சிறப்பாக வளம் பெறத் துவங்கும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டம நாட்கள்:
08.12.2022 வியாழன் இரவு 02.07 முதல் 11.12.2022 ஞாயிறு பகல் 01.30 மணி வரை.

அதிர்ஷ்ட நிறங்கள்:
ஒரேஞ்ச், மஞ்சள், சிவப்பு.

அதிர்ஷ்ட திசைகள்:
வடக்கு, வடமேற்கு, தென்கிழக்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்:
செவ்வாய், வியாழன், ஞாயிறு.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
வெள்ளிக்கிழமை துர்க்கையம்மன் வழிபாடு செய்து விளக்கெண்ணெய் தீபமிட்டு வேண்டிக் கொள்ள உங்களின் தொழில், வேலை வாய்ப்பு சிறப்பாக அமையும்.

தனுசு
சுய திறமையால் முன்னேற வேண்டுமென்று நினைக்கும் தனுசு ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் மறைவு ஸ்தானங்களைப் பார்ப்பதும் யோகாதிபதி சூரியனுடன் தொழில் ஸ்தானாதிபதி புதன் ராசியில் இணைந்திருப்பதும் உங்களில் தொழிலில் முடங்கி கிடந்த சகல காரியமும் செயற்பட உதவும். நேர்மையாக எதையும் செயற்படுத்து வேண்டுமென்று நினைப்பீர்கள். உங்களின் தனிப்பட்ட வளர்ச்சிக்கு பக்க பலமாக உதவிகள் கிடைக்கும். அரசியலிலும், பொது வாழ்விலும் உங்கள் சேவை சிறப்பாக அமையப் பெறுவீர்கள். கலைத்துறையினர் எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையும். புத்திரர்களுக்கு வேலை வாய்ப்பும், தொழிலில் நிலையான சூழ்நிலைகளும் உண்டாகும். வீடு கட்டும் முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். புதிய வாகன வசதிகளைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டம நாட்கள்:
11.12.2022 ஞாயிறு பகல் 01.31 முதல் 13.12.2022 செவ்வாய் இரவு 01.05 மணி வரை.

அதிர்ஷ்ட நிறங்கள்:
மஞ்சள், வெண்மை, சிவப்பு.

அதிர்ஷ்ட திசைகள்:
கிழக்கு, தென்கிழக்கு, வடக்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்:
வியாழன், வெள்ளி, ஞாயிறு.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் வழிபாடு செய்து நெய் தீபமிட்டு துளசி மாலை, பச்சை நிறப் பூ மாலை அணிவித்து வேண்டிக் கொள்ள சகல காரியமும் வெற்றியைத் தரும்.

மகரம்
திறமையான செயற்பாடுகளை விரும்பிச் செய்யும் மகர ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் சனியுடனும் சுக்கிரன் யோகாதிபதியுடனும் இணைவு பெற்று அமைவதும் எட்டாமிடத்து அதிபதியுடன் பாக்கியாதிபதி புதன் விரய ஸ்தானத்தில் அமைவதும் எதிர்பார்த்துக் காத்திருந்த காரியம் குறித்த நல்ல தகவல்களைப் பெறுவீர்கள். தினமும் எதையாவது செய்து வர வேண்டுமென்ற உங்களின் ஆர்வத்திற்குத் தகுந்தபடி சில காரியங்கள் சிரமமின்றி அமையும். குறைந்த முதலீடுகளில் நீங்கள் செய்யும் தொழில் நல்ல லாபம் பெறும். அரசியலிலும், உத்தியோகத்திலும் உங்களின் நேர்மை உங்களுக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத் தரும். விரைவில் உயர் பதவியும், மரியாதையும் உங்களைத் தேடி வரும். வாகன வசதிகளைப் பெறுவதுடன் வெளியூர் அடிக்கடி சென்று வரும் வாய்ப்பைப் பெறுவீர்கள். கலைத்துறை சார்ந்தவர்களுக்கு நல்ல காலமாக அமையும்.

சந்திராஷ்டம நாட்கள்:
13.12.2022 செவ்வாய் இரவு 01.07 முதல் 16.12.2022 வெள்ளி பகல் 11.18 மணி வரை.

அதிர்ஷ்ட நிறங்கள்:
நீலம், வெண்மை, சிவப்பு.

அதிர்ஷ்ட திசைகள்:
தெற்கு, தென்கிழக்கு, வடமேற்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்:
சனி, ஞாயிறு, வெள்ளி.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
சனிக்கிழமை வைரவருக்கு நல்லெண்ணெய் தீபமும், செவ்வாய்க்கிழமை மாரியம்மனுக்கு வேப்பெண்ணெய் தீபமும் ஏற்றி வேண்டிக் கொள்ள தொடர்ந்து நல்ல காரியம் நிறைவேறும்.

கும்பம்
விடா முயற்சியினால் எதையும் சாதிக்கும் கும்ப ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு தன ஸ்தானத்தில் குரு ஆட்சி பெற்றும் சுப ஸ்தானத்தில் செவ்வாய் அமர்ந்தும் லாப ஸ்தானத்தில் சூரியன் புதனுடன் அமர்ந்தும் உங்களின் செயற்பாடுகளில் பல தடைகளைத் தாண்டி விரிவுபடுத்திக் கொண்டு செல்ல உதவுவர். யாரையும் எளிதில் நம்பிச் செயற்படாமல் உங்களின் ஆலோசனைப்படி செயற்படுவீர்கள். அரசியலிலும், உத்தியோகத்திலும் உங்களின் கடமையைச் சரியாகச் செய்து நற்பெயரைப் பெறுவீர்கள். சிலருக்கு புதிய பதவி கிடைக்கப் பெறும். தனியாக எதையும் சாதித்துக் காட்ட விரும்புவீர்கள். முக்கியமான சில காரியங்களை நண்பர்களின் ஆலோசனைப்படி செய்து வெற்றியையும் காண்பீர்கள். கலைத்துறையினர் வெளியூர் நிகழ்ச்சிகளில் சென்று வரும்படி அமையும். பெண்களுக்கு வேண்டிய உதவிகள் கிடைக்கும். பொருளாதார நிலை சீராகும். வரவேண்டிய தொகை விரைவில் வசூலாகும். 

சந்திராஷ்டம நாட்கள்:
16.12.2022 வெள்ளி பகல் 11.19 முதல் 18.12.2022 ஞாயிறு இரவு 07.12 மணி வரை.

அதிர்ஷ்ட நிறங்கள்:
நீலம், மஞ்சள், சிவப்பு.

அதிர்ஷ்ட திசைகள்:
மேற்கு, வடமேற்கு, வடக்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்:
சனி, ஞாயிறு, வியாழன்.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
வெள்ளிக்கிழமைகளில் அம்மன் வழிபாடு செய்து மஞ்சள், குங்குமம் வைத்து நெய் தீபமிட்டு வணங்கி வரவும். செவ்வாய்க்கிழமை சுப்ரமணியரை வணங்கி சிவப்புப் பூ வைத்து வேண்டிக் கொள்ள சகல காரியமும் வெற்றியைத் தரும்.

மீனம்
அமைதியை அதிகமாக விரும்பிச் செயற்படும் மீன ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் ராசியில் அமர்வதால் அவர் பார்க்குமிடம் சிறப்பாக அமையும். லாப ஸ்தானத்தில் லாபாதிபதி சனி - சுக்கிரன் இணைவு பெறுவதும் தனாதிபதி செவ்வாய் முயற்சி ஸ்தானத்தில் அமர்வதும் உங்களின் ஒவ்வொரு காரியமும் திட்டமிட்டபடி நடக்கும். அதற்கான முயற்சி நல்ல பலனைப் பெற்றுத் தரும். நினைவில் எதையும் உறுதியுடன் நிறுத்திச் செயல்படுவீர்கள். இசைக் கலையில் வல்லுநர்களாகத் திகழ்வீர்கள். உங்களின் தனிப்பட்ட திறமையை வெளிப்படுத்த சந்தர்ப்பம் அமையும். கணவன்-மனைவி ஒற்றுமையை நிலை நாட்டுவீர்கள். புதிய தொழில் துவங்க சிலருக்கு சூழ்நிலை அமையும். அரசியல், பொது வாழ்வில் ஆர்வம் கொண்டு செயற்படுவீர்கள். பெரும்பாலும் ஆன்மீகத்தில் அதிக நாட்டம் உண்டாகும். கூட்டுத் தொழிலில் சிலருக்கு சில பிரச்சனை வந்து மறையும், பணப்புழக்கம் இருக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் பெறுவீர்கள்.

சந்திராஷ்டம நாட்கள்:
18.12.2022 ஞாயிறு இரவு 07.13 முதல் 20.12.2022 செவ்வாய் இரவு 12.42 மணி வரை.

அதிர்ஷ்ட நிறங்கள்:
மஞ்சள், நீலம், ஒரேஞ்ச்.

அதிர்ஷ்ட திசைகள்:
வடக்கு, வடகிழக்கு, தென்கிழக்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்:
வியாழன், சனி, ஞாயிறு.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
வியாழக்கிழமை காலை 06 - 07 மணிக்குள் விநாயகர் வழிபாடு செய்து தேங்காய் எண்ணெய் தீபமிட்டு வேண்டிக் கொள்ள நினைத்தது விரைவில் நடந்து வெற்றி கிட்டும்.

கணித்தவர் அருள்வாக்கு ஜோதிடர் 
வாடிப்பட்டி R.ஆனந்தன், 
தொடர்புகளுக்கு: 91-9789341554.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செல்வவளம் கொழிக்க நாளாந்தம் மேற்கொள்ள வேண்டிய...

2024-02-27 15:20:20
news-image

தன வரவை அதிகரிக்கும் சித்தர் வழிபாடு

2024-02-26 18:06:13
news-image

தடைகளை அகற்றி தன வருவாயை அதிகரிக்கச்...

2024-02-25 21:22:54
news-image

யாரெல்லாம் ஆலயத்துக்கு சென்று இறைவனை வழிபடக்கூடாது!?

2024-02-24 14:29:42
news-image

நல்ல பலன்களை அவதானிக்கும் காலக்கணித முறை

2024-02-23 15:56:41
news-image

தடைகளை அகற்றி தன வரவை அதிகரிக்கும்...

2024-02-20 16:53:46
news-image

முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் அள்ளித் தரும் காவல்...

2024-02-19 18:53:02
news-image

திதி நித்ய தேவதைகளை வழிபடும் முறைகளும்,...

2024-02-17 16:39:32
news-image

அனைத்து வளங்களையும் அள்ளித் தரும் திதி...

2024-02-16 17:55:02
news-image

உங்கள் உடலில் நோயை உண்டாக்கும் கிரகங்களும்...

2024-02-14 17:05:33
news-image

வல்லமை தரும் உபாசனை தெய்வ வழிபாடு..!

2024-02-13 16:37:25
news-image

தன ஆக்கர்ஷன மூலிகையை பயன்படுத்தும் வழிமுறை...!

2024-02-12 17:42:51