ஐ.எஸ். இயக்கத்தின் தலைவர் அபு ஹசன் அல் ஹஷிமி அல் குரேஷி சமரில் பலி : ஐ.எஸ். இயக்கம் அறிவிப்பு

By Sethu

01 Dec, 2022 | 02:42 PM
image

ஐ.எஸ். இயக்கத்தின் தலைவர் அபு ஹசன் அல் ஹஷிமி அல் குரேஷி சண்டை ஒன்றில் கொல்லப்பட்டுள்ளார் என அந்த இயக்கம் அறிவித்துள்ளது.

இறைவனின் எதிரிகளுடனான சமரில் அபு ஹசன் அல் ஹஷிமி அல் குரேஷி  (abu al-hasan al-hashimi al-qurashi) உயிரிழந்தார் என ஐ.எஸ். இயக்கத்தின் பேச்சாளர் ஒருவர் நேற்று தெரிவித்துள்ளார். இது தொடர்பான விபரங்களை அவர் வெளியிடவில்லை.

இதேவேளை, சிரியாவின் தென் பகுதியிலுள்ள தாரா மாகாணத்தில், ஒக்டோபர் மத்தியில் நடந்த சுதந்திர சிரிய இராணுவம் எனும் கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் அபு ஹசன் அல் ஹஷிமி அல் குரேஷி கொல்லப்பட்டார் என  அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளைப் பணியகம் தெரிவித்துள்ளது.

முன்னாள் கிளர்ச்சியாளர்களுடன் இணைந்து ஐ.எஸ். இயக்கத்துக்கு எதிராக  தாக்குதலை ஆரம்பிழத்ததாக கடந்த ஒக்டோபர் மத்தியில் சிரிய அரசாங்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஐ.எஸ். இயக்கத்தின் முன்னாள் தலைவர் அபு இப்ராஹிம் அல் குரேஷி சிரியாவில் வட பகுதியிலுள்ள இட்லிப் மாகாணத்தில் கடந்த பெப்ரவரியில் அமெரிக்க இராணுவத்தின் தாக்குதலில் உயிரிழந்தார். 

அவருக்கு முன்னர் தலைவராக இருந்த அபு பக்ர் அல் பாக்தாதி 2019 ஒக்டோபரில் இட்லிப் மாகாணத்தில் கொல்லப்பட்டிருந்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெளிநாட்டிலுள்ள ரஷ்ய ஊடகவியலாளருக்கு 8 வருட...

2023-02-01 17:54:10
news-image

தன்னைப் போன்ற தோற்றம் கொண்ட  யுவதியை...

2023-02-01 17:06:10
news-image

ஈரானில் பகிரங்கமாக நடனமாடிய ஜோடிக்கு 10...

2023-02-01 14:58:34
news-image

அவுஸ்திரேலியாவில் காணாமல் போயிருந்த கதிரியக்க கொள்கலன்...

2023-02-01 14:55:18
news-image

பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் எதிர்நோக்கும்...

2023-02-01 12:41:27
news-image

உக்ரேனுக்கான இராணுவ உதவிகள் குறித்து சிந்திப்பதாக...

2023-02-01 12:16:48
news-image

மியன்மாரில் இராணுவம் ஆட்சியை கைப்பற்றி இன்றுடன்...

2023-02-01 11:56:05
news-image

சீனாவை கண்காணித்து அணு ஆயுதங்களை நவீனமயமாக்கும்...

2023-02-01 11:54:19
news-image

இந்தியாவின் ஜி20 தலைமைத்துவம் தீர்க்கமானது -...

2023-02-01 11:47:11
news-image

'பிபிசி தகவல் போர் நடத்துகிறது' -...

2023-02-01 11:15:02
news-image

உரியில் இடம்பெற்ற தாக்குதலுக்குப் பின் சிந்து...

2023-02-01 11:42:59
news-image

ஜார்கண்ட் மாநிலத்தில் குடியிருப்புக் கட்டடம் தீப்பற்றியதால்...

2023-02-01 11:13:29