நியூ ஸிலாந்து, பின்லாந்து பிரதமர்களின் சந்திப்புக்கு சமவயதான பெண்கள் என்பது காரணமா?  சூடாக பதிலளித்த ஜெசிந்தா, சனா மரின்

By Sethu

01 Dec, 2022 | 01:21 PM
image

நியூ ஸிலாந்து, பின்லாந்து நாடுகளின் பிரதமர்கள் சந்தித்துக்கொண்டமைக்கு அவர்கள் சம வயதுடைய பெண்கள் என்பது காரணமல்ல என இரு பிரதமர்களும் கூறியுள்ளனர்.

பின்லாந்து பிரதமர் சனா மரின், தற்போது நியூ ஸிலாந்துக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ளார். அவர், நியூ ஸிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெனுடன் இணைந்து பங்குபற்றிய செய்தியாளர் மாநாடு.. நடைபெற்றது.

அப்போது நியூ ஸிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெனிடம் கேள்வி எழுப்பிய நியூ ஸிலாந்து ஊடகவியலாளர் ஒருவர், 'நீங்கள் இருவரும் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டமைக்கு சம வயதுடையவர்கள் என்பதும் இருவருக்கும் பொதுவான பல விடயங்கள் உள்ளமையும் தான் காரணமா என மக்கள் எண்ணுகின்றனர்' என்றார்.

அக்கேள்விக்கு பதிலளித்த ஜெசிந்த ஆர்டென், இரு பெண்கள் சந்தித்துக்கொள்வதற்கு அவர்களின் பாலினம் மட்டும் காரணமல்ல என்றார்.

'பராக் ஒபாமாவும் ஜோன் கீயும் சந்தித்தமைக்கு அவர்கள் சம வயதானவர்கள் என்பதுதான் காரணமா  என எவரும் கேள்வி எழுப்பினார்களா எனத் தெரியவில்லை எனவும் 42 வயதான ஜெசிந்தா ஆர்டென் கூறினார். 

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா 1961 ஆகஸ்ட் 4 ஆம் திகதி பிறந்தவர். நியூ ஸிலாந்தின் முன்னாள் பிரதமர் ஜோன் கீ 1961 ஆகஸ்ட் 9 ஆம் திகதி பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

பின்னர், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை அவர் பட்டியலிட்டதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார வாய்ப்புகளை அதிகரிப்பதற்கு இச்சந்திப்பு ஒரு வாய்ப்பாகும் எனவும் கூறினார்.

அதன்பின், பின்லாந்து பிரதமர் சனா மரின் (37) பேசுகையில், 'நாம் சந்தித்தமைக்கு காரணம் நாம்  பிரதமர்கள் என்பதனால் தான்' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெளிநாட்டிலுள்ள ரஷ்ய ஊடகவியலாளருக்கு 8 வருட...

2023-02-01 17:54:10
news-image

தன்னைப் போன்ற தோற்றம் கொண்ட  யுவதியை...

2023-02-01 17:06:10
news-image

ஈரானில் பகிரங்கமாக நடனமாடிய ஜோடிக்கு 10...

2023-02-01 14:58:34
news-image

அவுஸ்திரேலியாவில் காணாமல் போயிருந்த கதிரியக்க கொள்கலன்...

2023-02-01 14:55:18
news-image

பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் எதிர்நோக்கும்...

2023-02-01 12:41:27
news-image

உக்ரேனுக்கான இராணுவ உதவிகள் குறித்து சிந்திப்பதாக...

2023-02-01 12:16:48
news-image

மியன்மாரில் இராணுவம் ஆட்சியை கைப்பற்றி இன்றுடன்...

2023-02-01 11:56:05
news-image

சீனாவை கண்காணித்து அணு ஆயுதங்களை நவீனமயமாக்கும்...

2023-02-01 11:54:19
news-image

இந்தியாவின் ஜி20 தலைமைத்துவம் தீர்க்கமானது -...

2023-02-01 11:47:11
news-image

'பிபிசி தகவல் போர் நடத்துகிறது' -...

2023-02-01 11:15:02
news-image

உரியில் இடம்பெற்ற தாக்குதலுக்குப் பின் சிந்து...

2023-02-01 11:42:59
news-image

ஜார்கண்ட் மாநிலத்தில் குடியிருப்புக் கட்டடம் தீப்பற்றியதால்...

2023-02-01 11:13:29