சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆங்கிலம் கற்க அரசாங்கம் பகுதியளவு நிதியுதவி வழங்கும் - ஜனாதிபதி

Published By: Vishnu

01 Dec, 2022 | 04:14 PM
image

(இராஜதுரை ஹஷான், எம்.ஆர்.எம்.வசீம்)

சட்டக் கல்லூரி மாணவர்கள் ஆங்கில மொழியில் மாத்திரம் பரீட்சைக்கு தோற்ற வேண்டும் என சட்ட ஆய்வு கவுன்சில் எடுத்துள்ள தீர்மானத்திற்கும் எமக்கும் தொடர்பில்லை.

சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆங்கிலம் கற்க வேண்டுமாயின் அவர்களுக்கு பகுதியளவு நிதியுதவி வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். ஆங்கிலம் கற்பதில் தவறேதும் உள்ளதா என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சபையில் கேள்வியெழுப்பினார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (1)  இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டு இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தில் கல்வி மற்றும் மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் குறிப்பிட்டதாவது,

சட்டக்கல்லூரி மாணவர்கள் இனி ஆங்கில மொழியில் மாத்திரம் தான் பரீட்சைக்கு தோற்ற முடியும் என்ற தீர்மானத்தை மறுபரிசீலனை செய்யுமாறு பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியுள்ளார்கள். இவ்விடயம் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம் என்ன.

இதற்கு பதிலளித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,சட்ட ஆய்வு கவுன்சில் தான் அந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.இது அரசாங்கத்தின் நிறுவனமல்ல, சட்டமாதிபர்,பிரதம நீதியரசர் மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினர்கள் கவுன்சிலின் உறுப்பினர்களாக உள்ளார்கள்.ஆகவே எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கும் எமக்கும் தொடர்பில்லை.

சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆங்கிலம் கற்க வேண்டுமாயின் அதற்கான சூழல் ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.ஆங்கில பாடநெறிக்கான கட்டணத்தை பகுதியளவில் செலுத்துவது குறித்தும் அவதானம் செலுத்தலாம், ஆங்கில மொழி கற்பதில் ஏதேனும் தவறு உள்ளதா என கேள்வி எழுப்பினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சில இடங்களில் 100 மில்லிமீற்றர் அளவில்...

2024-06-22 08:36:55
news-image

கர்நாடகாவில் முத்தையா முரளிதரன் ரூ.1400 கோடி...

2024-06-22 00:34:31
news-image

பொசன் பண்டிகை தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாண...

2024-06-22 00:19:19
news-image

யாழில் பதிவற்ற மோட்டார் வாகனம், வாளுடன்...

2024-06-22 00:12:34
news-image

யாழில் 2024 ம் ஆண்டுக்கான சர்வதேச...

2024-06-22 00:01:03
news-image

மன்னார் முருங்கன் பகுதியில் கோர விபத்து...

2024-06-21 23:56:18
news-image

வைத்தியசாலை வீதி ஒரு வழிப்பாதையாக மாற்றம்!

2024-06-21 23:51:14
news-image

வங்குராேத்திலிருந்து நாடடை மீட்க அரசாங்கம் அனைத்து...

2024-06-21 21:45:12
news-image

ஜனாதிபதியின் மன்னார் விஜயம் குறித்து மீனவர்கள்...

2024-06-21 21:44:00
news-image

நீண்ட நாட்களுக்கு பழுதடையாத செமன் பக்கற்...

2024-06-21 21:40:13
news-image

பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த இருவர்...

2024-06-21 21:36:48
news-image

போதைப்பொருட்களுடன் 693 பேர் கைது !

2024-06-21 21:37:38