கோணமுட்டாவ தோட்ட தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் கோணமுட்டாவ தேயிலை தொழிற்சாலையில் நேற்று புதன்கிழமை (நவ 30) குறித்த தோட்ட நிர்வாகத்துடன் இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இதன்போது ஆலோசிக்கப்பட்ட விடயங்களாவன,
தொழிலாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் அரை சம்பளம் முழு சம்பளமாக வழங்க நிர்வாகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதுவரை வலுக்கட்டாயமாக 20 கிலோ கொழுந்து பறிக்க வேண்டும் என நிர்வாகத்தால் நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.
எனினும், இனி 20 கிலோ கொழுந்து என்பதை வலுக்கட்டாயமாக நிர்ணயிக்க முடியாது எனவும், தேயிலை மலைகளுக்கேற்ற வகையிலே கொழுந்தின் எடை நிர்ணயிக்கப்பட வேண்டும் எனவும், 20 கிலோவாக இருந்த அடிப்படை எடை 16 கிலோவாக குறைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் ஒவ்வொரு நிலுவைக்கும் 3 கிலோ தேயிலை கட்டாய குறைப்பானது இன்று முதல் ஒரு கிலோவாக மாற்றப்பட்டுள்ளது.
அத்துடன் ஞாயிறு மற்றும் போயா நாட்களில் வழங்கப்படாத 1 1/2 நாள் சம்பளம், தற்போது வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.
இதுவரை நிபந்தனை, ஓய்வூதியத் தொழிலாளர்களுக்கு கைகாசு அடிப்படையில் ஊதியம் வழங்கப்பட்டு வந்தது.-அது, இனிவரும் காலங்களில் முழு சம்பளமாக வழங்கப்படும் என ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதோடு, மேலும் பல விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
இந்நிலையில் தோட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்ட ஒப்புதலை ஏற்று, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தோட்டத்திலிருந்து தேயிலைத்தூளை ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM