நோட்டன் கலவலதெனிய ஆற்றில் வயோதிப பெண் ஓருவரின் சடலம் மீட்கபட்டுள்ளதாக நோட்டன் பொலிஸார் தெரிவித்தனர் 

நோட்டன் பொலிஸ் பிரிவின் கலவலதனிய பிரதேசத்தை சேர்ந்த 63 வயதுடைய ஜீ.ஏமாவதி என்பவரெ இவ்வாறு மீட்கப்பட்டவராவர்.

இச்சம்பவம் இன்று காலை 9 மணியளவில் நிகழ்ந்துள்ளதாகவும் எனினும் உடனடியாக வட்டவளை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் அவர் ஏற்கனவே மரணமானதாக வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் 

குடும்ப தகராரின் காரணமாக இந்த மரணம் நிகழ்திருக்கலாம் என தெரிவித்த பொலிஸார் சடலத்தை பிரேத பரிசோணை மேற்கொள்ள உள்ளதுடன் விசாரணை தொடர்வதாக தெரிவித்தனர்.