சி குழுவில் பிரான்ஸுக்கு அடுத்ததாக 2 ஆம் சுற்றுக்கு தகுதிபெறும் அணியைத் தீர்மானிக்கும் போட்டிகள் இன்று

Published By: Vishnu

30 Nov, 2022 | 06:39 PM
image

(நெவில் அன்தனி)

கத்தாரில் நடைபெற்றுவரும் 2022 பீபா உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தின் நொக்-அவுட் சுற்றுக்கு முதலாவது அணியாக தகுதிபெற்ற நடப்பு சம்பியன் பிரான்ஸ் சி குழுவுக்கான முதல் சுற்றின் கடைசிக் கட்டப் போட்டியில் டியூனிசியாவை எட்யூகேஷன் சிட்டி விளையாட்ரங்கில் சந்திக்கவுள்ளது.

இதே குழுவில் இடம்பெறும் அவுஸ்திரேலியாவுக்கும் டென்மார்க்குக்கும் இடையிலான போட்டி அல் ஜனூப் விளையாட்டரங்கில் நடைபெறும்.

இந்த இரண்டு போட்டிகளும் இன்று புதன்கிழமை இரவு 8.30 மணிக்கு ஏககாலத்தில் ஆரம்பமாவுள்ளது.

பிரான்ஸை பொறுத்தமட்டில் டியூனிசியாவுடான இன்றைய போட்டி பெரிய சவாலுக்குரியதாகவோ அழுத்தம் கொடுக்கக்கூடியதாகவோ அமையப் போவதில்லை.

ஏற்கனவே அவுஸ்திரேலியாவையும் டென்மார்க்கையும் வெற்றிகொண்டுள்ள  பிரான்ஸ் தனது குழுவில் முதலாம் இடத்தை தக்கவைக்க டியூனிசியாவுடனான போட்டியில் வெற்றிதோல்வியற்ற முடிவு ஒன்றே போதும்.

இரண்டாம் சுற்றுக்கு ஏற்கனவே தெரிவாகியுள்ள பிரான்ஸ் தனது வீரர்களுக்கு கூடுதல் அழுத்தம் கோடுக்காமல் இன்றைய போட்டியில் மூன்றாவது வெற்றியை பதிவு செய்ய முயற்சிக்கவுள்ளது.

இதன் காரணமாக 2ஆம் சுற்றக்கு முன்னர் பிரதான வீரர்களுக்கு ஓய்வு கொடுக்க பிரான்ஸ் பயிற்றுநர் டிடியர் டெஸ்சாம்ப்ஸ் எண்ணியுள்ளார்.

'பிரேஸில், போர்த்துக்கல் போன்று எமது அணியும் 2ஆம் சுற்றுக்கு முன்னேறிவிட்டது. எனவே வீரர்களை மாற்றுவதற்கு எங்களுக்கு சந்தர்ப்பம் தொன்றியுள்ளது. எனினும் இந்த மூன்றாவது போட்டியை நாங்கள் எவ்வகையிலும் குறைத்து மதிப்பிடப்போவதில்லை' என டெஸ்சாம்ப்ஸ் கூறினார்.

'வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லாத போதிலும் அதிசிறந்த பெறுபேறை பதிவு செய்வதற்கே நாங்கள் விரும்புகிறோம்.

மறுபுறத்தில் பிரான்ஸை பிறப்பிடமாகக்கொண்ட 10 வீரர்களை தனது குழாத்தில் கொண்டுள்ள டியூனிசியா, அடுத்து சுற்றுக்கு செல்வதாக இருந்தால் இன்றைய போட்டியில் வெற்றிபெற்றாக வேண்டும். எனினும் அவுஸ்திரேலியா - டென்மார்க் போட்டி முடிவும் அதன் தலைவிதியை தீர்மானிக்கக்கூடியதாக இருக்கும்.

இதற்கு முன்னர் பிரான்ஸை ஒருபோதும் டியூனிசியா வெற்றிகொண்டதில்லை. இதன் காரணமாக இன்றைய போட்டியில் டியூனிசியாக சாதிக்கும் என எதிர்பார்க்கமுடியாது.

எனினும் தனது வீரர்களை டியூனிசியா பயிற்றுநர் ஜலீல் காத்ரி உற்சாகப்படுத்தி வருகிறார்.

'முடியாது என்று எதுவும் கிடையாது என்ற செய்தியை எனது வீரர்களுக்கு கெர்டுக்க விரும்புகின்றேன். இரண்டாம் சுற்றுக்கு செல்ல எமக்கு வாய்ப்பு இன்னும் இருக்கவே செய்கிறது' என ஜலீல் காத்ரி குறிப்பிடிட்டார்.

அவுஸ்திரேலியா - டென்மார்

கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டதில் சி குழுவில் பிரான்ஸுக்கு அடுத்ததாக இரண்டாவது அணியாக நொக்-அவுட் சுற்றில் விளiயாடத் தகுதிபெறும் அணி எது என்பதைத் தீர்மானிக்கும் போட்டியில் அவுஸ்திரேலியாவும் டென்மார்க்கும் இன்று இரவு மோதவுள்ளன.

உலகக் கிண்ண கால்பந்தாட்ட வரலாற்றில் இரண்டாவது தடவையாக 2ஆம் சுற்றுக்கு செல்வதற்கான நுழைவாயிலில் இருக்கும் அவுஸ்திரேலியாவுக்கு இன்றைய போட்டியில் வெற்றிதோல்வியற்ற முடிவே தேவைப்படுகிறது.

அவுஸ்திரேலியாவில் கிரிக்கெட், றக்பி ஆகிய இரண்டு விளையாட்டுகளுக்கு அடுத்தே கால்பந்தாட்டம் இருக்கின்றபோதிலும் கால்பந்தாட்டமே நாட்டை ஐக்கியப் படுத்துவதாக பயிற்றுநர் கிறஹாம் ஆர்னல்ட் தெரிவித்தார்.

எனவே 2 வருடங்களுக்கு முன்னர் யூரோ கிண்ண அரை இறுதியில் விளையாடிய டென்மார்க்கை வெற்றிகொள்வது அவுஸ்திரெலியாவுக்கு இலகுவாக அமையப் போவதில்லை.

பிரான்ஸிடம் படுதோல்வி (1 - 4)அடைந்த அவுஸ்திரேலியா, டியூனிசியாவை (1 - 0) வெற்றிகொண்டிருந்தது. மறுபுறத்தில் பிரான்ஸிடம்  தோல்வி (1 - 2) அடைந்த டென்மார்க், டியுனிசியாவுடனான போட்டியை வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்டது. எனவே இந்த இரண்டு அணிகளின் பெறுபேறுகளைக் கொண்டு எந்த அணி வெற்றிபெறும் என அனுமானிக்க முடியாது.

என்றாலும் இந்த இரண்டு அணிகளும் 2ஆம் சுற்றுக்கு செல்லவேண்டும் என்ற வைராக்கியத்துடன் விளையாடவிருப்பதால் இந்தப் போட்டி விறுவிறுப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

இலங்கையின் முதலாவது ஆசிய தங்கப் பதக்க...

2024-04-20 09:31:54
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41